பொது செய்தி

இந்தியா

ராணுவ வீரர்களை காத்த ‛வீர' மனைவிகள்

Added : நவ 30, 2016 | கருத்துகள் (16)
Advertisement
ராணுவ வீரர், மனைவிகளின் துணிச்சல்

ஜம்மு: நக்ரோட்டாவில் உள்ள ராணுவ முகாம் தாக்கப்பட்டபோது, அங்கிருந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் இருவர் காட்டிய துணிச்சலும், சமயோசித நடவடிக்கையும் ராணுவ வீரர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், பெரும் சேதத்தையும் தவிர்க்க உதவி உள்ளது.

ஜம்மு அருகில் உள்ள நக்ரோட்டாவில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முகாமில் பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா என ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.


துணிச்சல்:

இந்நிலையில், ராணுவ முகாமில் வீரர்கள் குடியிருப்பில் தங்களது கணவருடன் பச்சிளம் குழந்தைகளுடன் வசித்து வரும் பணிபுரியும் இரண்டு ராணுவ வீரர்களின் மனைவிகள், பயங்கரவாதிகள் தாக்கியபோது, துணிச்சலாக, வீட்டில் வைத்திருந்த பொருட்களை கொண்டு, தடுப்பு அமைத்திருந்தனர், இதனால், பயங்கரவாதிகள் ய உள்ளே நுழைய முடியவில்லை.
இதன் மூலம் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீரர்களின் குழந்தைகளுக்கு 18 மாதங்கள் மற்றும் 2 மாதங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சாமர்த்தியம்:

இது தொடர்பாக ராணுவ வீரர் ஒருவர் கூறியதாவது: "இரவுப்பணியில் இருந்த இரண்டு வீரர்களின் மனைவிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியதை தெரிந்ததும், துணிச்சலாகவும், சாமர்த்தியமாகவும், தங்கள் வீட்டில் வைத்திருந்த பொருட்களை வைத்து அந்த குடியிருப்பிற்குள் பயங்கரவாதிகள் உள்ளே நுழைய முடியாதவாறு, தடுப்புகளை அமைத்தனர். இந்த தடுப்பை பயங்கரவாதிகளால் தகர்க்க முடியவில்லை. பெண்கள் மட்டும் துணிச்சலாக செயல்படாமல் இருந்திருந்தால், பயங்கரவாதிகள் அங்கு நுழைந்து பலரை பிணைக்கைதிகளாக வைத்திருப்பர். அவர்கள், ராணுவத்திற்கும், குடும்பத்திற்கும் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்" எனக்கூறினார்.


மீட்பு:

பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ராணுவ வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் தங்கியுள்ள இரண்டு கட்டிடத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்தனர். தொடர்ந்து நிலைமை சமாளிக்கப்பட்டு, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 12 வீரர்கள், இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகள் பிறந்து முறையே, 18 மாதம் மற்றும் இரண்டு மாதமே ஆகிறது.
வீரர்களை மீட்கும் முயற்சியில் ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் பலியானார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உடல் மீட்கப்பட்டுள்ளன. அங்கு தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியும், துப்பாக்கியால் சுட்டவாறும் உள்ளே நுழைந்தனர். ஆரம்ப கட்ட மோதலில் 3 வீரர்கள் பலியானார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Bangalore,இந்தியா
01-டிச-201608:50:02 IST Report Abuse
Rajesh ஏ தமிழ் நிலா...பார்த்தாயா எங்கள் இராணுவ பெண்களுக்கு எவ்வளவு தைரியம் என்று .. தீவிரவாதிகளுக்கும், துரோகிகளுக்கும் சாவு மணி அடிக்கும் காலம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
01-டிச-201607:52:50 IST Report Abuse
ரத்தினம் பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்?, இது துணிச்சல் இல்ல. ஏமாளித்தனம். இதை போய் பச்சைக்காரன்ட போய் சொல்லு. எந்த பாகிஸ்தானும் இப்படி நினைக்கிறதில்லை.. அவன் மத வெறி பிடித்து நம்மள எப்பவும் விரோதியாகத்தான் பார்க்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-டிச-201605:02:24 IST Report Abuse
Kasimani Baskaran வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்.... வீரனின் மனைவி வீராங்கனையாக இருப்பதில் என்ன ஆச்சரியம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X