மகா கலைஞன் நரசிம்மலு...

Updated : டிச 02, 2016 | Added : டிச 02, 2016 | கருத்துகள் (4)
Advertisement
மகா கலைஞன் நரசிம்மலு...

மகா கலைஞன் நரசிம்மலு...

சக்கரங்கள் பொருத்திய சதுர பலகையில் உட்கார்ந்தபடி,கால்களை மட்டுமே பயன்படுத்தி ஊர்ந்து ஊர்ந்து அந்த அரங்கம் முழுவதும் வலம்வந்த மாற்றுத்திறனாளியான நரசிம்மலு உருவாக்கிய நுால் ஓவியங்களை (எம்பிராய்டரி)பார்த்து வியக்காதவர்கள் குறைவு.
பறவைகளும்,குதிரைகளும்,மலர்களும்,கிராமத்து காட்சிகளும் பல வண்ணத்தில் உயிரோட்டத்துடன் காணப்படுகிறது. அத்துணை நுால் ஒவியங்களும் நரசிம்மலுவின் கால்விரல்களால் உருவாக்கப்பட்டது என்பதுதான் பெரிய ஆச்சர்யம்.

ஊனமுற்ற குழந்தை என்று காப்பகத்தில் சேர்க்கப்பட்ட நரசிம்மலுவிற்கு ஆரம்பம் முதலே கைகள் செயல்படவில்லை,பேச்சும் சரியாக வரவில்லை கால்கள் மட்டுமே செயல்பட்டுக்கொண்டு இருந்தது.
சும்மா இருக்கக்கூடாது ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக கால் விரல்களில் பிரஷ் பிடித்து ஒவியம் வரைய ஆரம்பித்தார்.பின் ஒரு காலகட்டத்தில் கைகளால் உருவாக்கவே சிரமமான எம்பிராய்டரி உருவங்களை இவர் கால்களால் உருவாக்க ஆரம்பித்தார்.இவரது கண்கள் துாரத்தில் இருக்க, இரு கால்விரல்களால் ஊசியில் நுால்கோர்த்து மிக துல்லிதமாக மிகநுட்பமாக இவர் உருவாக்கிய நுால் ஒவியங்கள் பிரமாதமாக வந்தது.

நரசிம்மலு உருவாக்கிய எம்பிராய்டரி ஒவியங்களை பார்த்துவியந்த சென்னை ஹார்ட் பீட் பவுன்டேஷன் விஎஸ்ரமணா இவைகளை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று முடிவெடுத்தார்.அதன்படி தற்போது சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரியில் நரசிம்மலுவின் படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு இதர மாற்றுத்திறனாளி கலைஞர்களான சுவேதா கணேஷ்,உதயகுமார்,உத்தம்குமார் ஆகியோரின் ஒவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.


ஒவியங்கள் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துகளுடன் நுட்பமாக வரையப்பட்டுள்ளது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள படைப்புகள் விலைக்கும் கிடைக்கும்.இதுபற்றிய நீங்கள் கூடுதல் தகவலறிய ஹார்ட்பீட் ரமணாவை தொடர்புகொள்ளவும் எண்:9940198135.
-எல்.முருகராஜ்.

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhupesh Mohan - Chennai,இந்தியா
23-டிச-201616:33:57 IST Report Abuse
Bhupesh Mohan நன்றாக வரைந்துளீர்கள்....மிகவும் அற்புதம்.... மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இப்படிக்கு உங்கள் நண்பன்
Rate this:
Share this comment
Cancel
Ifthikar Ahmed - Chennai,இந்தியா
14-டிச-201613:05:39 IST Report Abuse
Ifthikar Ahmed அருமை தோழா ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X