பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி!

Added : டிச 03, 2016 | கருத்துகள் (7)
Advertisement
ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி!

தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது.ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-டிச-201612:00:33 IST Report Abuse
Nallavan Nallavan நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் ..... அரசியலில் இவரை நாரதர் என்கிறார்கள் ..... பொறுத்திருந்து பார்ப்போம் .....
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
04-டிச-201611:39:52 IST Report Abuse
Durai Ramamurthy திருடன் கையிலேயே சாவியை கொடுத்து, பாதுகாக்கும் பொறுப்பை அவனிடமே ஒப்படைப்பது மிகவும் புத்திசாலித்தனமான செயல். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கும் மத்திய அரசின் முக்கியப்புள்ளி ஒருவரிடமே அனுமதி பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்து வெற்றி பெறுவது. தமிழர்களின் புத்திசாலித்தனமான செயல்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
Rate this:
Share this comment
Cancel
Original Indian - Chennai,இந்தியா
04-டிச-201610:11:35 IST Report Abuse
Original Indian சரிதான், தமிழக மக்களே ஆப்பு உங்களை தேடி வரவில்லை, நீங்களே தேடி போய் உட்காருகிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X