சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சர்ச்சுக்கு வந்த கல்லூரி மாணவி கடத்தல்: பலாத்காரம் செய்த பாதிரியார் கைது

Added : டிச 05, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, சர்ச்சுக்கு வந்த கல்லூரி மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி கடத்தி, பலாத்காரம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி - மேலப்பட்டி சாலையில் உள்ள, பெந்தகோஸ் பிரிவின் சர்ச் பாதிரியார் சுரேந்திர மோகன், 39. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த, பொன்னம்பட்டியை சேர்ந்த இவர், பாதிரியாருக்கான படிப்பு, பயிற்சி முடித்துள்ளார். அதன்பின், பேளுக்குறிச்சி பகுதியில் தங்கி, அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மத பிரசாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், லதா, 35, என்ற பெண்ணுடன் திருமணமானது. குழந்தைகள் இல்லாததால், பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். இவர், மேலப்பட்டி சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் தவறாக பழகியதால், அவரிடம் தகராறு செய்து கொண்டு, ராசிபுரத்துக்கு லதா இடம் பெயர்ந்தார். இந்நிலையில், சர்சுக்கு வந்த இதே பகுதியை சேர்ந்த, 19 வயது கல்லூரி மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை தவறாக நடந்துள்ளார். கடந்த, 1ல் கல்லூரி பஸ்சுக்காக, பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த மாணவியை, காரில் சென்ற சுரேந்திர மோகன், திண்டுக்கல்லுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த, 1ல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற மகளை காணாததால், பல இடங்களில் பெற்றோர் தேடி வந்தனர். அடுத்த நாள், பாதிரியாரிடம் இருந்து தப்பித்து, மாணவி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இதையறிந்த பெற்றோர், பேளுக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார், நேற்று, சுரேந்திர மோகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Chennai,இந்தியா
05-டிச-201617:32:38 IST Report Abuse
Kumar பாதிரியார் என்று பொதுவான பெயரை போடுவதால் அது குழப்பத்தை தருகிறது. நல்ல பாதிரியார்கள் மீதும் சந்தேகக்கண் வருகிறது. எந்த சபை, எந்த கோவில் பாதிரியார் என்று தலைப்பிலேயே போட்டுவிட்டால் நல்லது என்று நினைக்கிறன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X