பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்துக்கு சொந்தமான கட்டடம்: ஓடுகளை அகற்றியதால் மறியல்

Added : டிச 05, 2016
Share
Advertisement
மோகனூர்: என்.புதுப்பட்டி கிராம மக்களால், பள்ளிக்கு வழங்கப்பட்ட கட்டடத்தின் ஓடுகளை, அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலை மறியல் நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த, என்.புதுப்பட்டியை சேர்ந்த முன்னாள் வி.ஏ.ஓ., விஜயராகவன், கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன், தன் நிலத்தை பள்ளிக்கு பயன்படுத்திக் கொள்ள வழங்கினார். அந்த இடத்தில் மக்கள் சார்பில், கட்டடம் கட்டி

மோகனூர்: என்.புதுப்பட்டி கிராம மக்களால், பள்ளிக்கு வழங்கப்பட்ட கட்டடத்தின் ஓடுகளை, அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலை மறியல் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த, என்.புதுப்பட்டியை சேர்ந்த முன்னாள் வி.ஏ.ஓ., விஜயராகவன், கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன், தன் நிலத்தை பள்ளிக்கு பயன்படுத்திக் கொள்ள வழங்கினார். அந்த இடத்தில் மக்கள் சார்பில், கட்டடம் கட்டி துவக்கப்பள்ளி செயல்பட்டது. அதற்கு, ஒன்றிய நிர்வாகம் சார்பில், வாடகையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக அரசின் சார்பில், வேறொரு இடத்தில் கட்டடம் கட்டப்பட்டதை அடுத்து, வாடகை கட்டடம் பயன்பாடின்றி, பூட்டிய நிலையில் இருந்தது. இந்நிலையில், மோகனூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் தங்கவேல், மயிலாடுதுறையை சேர்ந்த, பத்து பேரை அழைத்து வந்து, பழைய கட்டடத்தின் மேற்கூரை ஓடுகளை, நேற்று காலை, 8:30 மணிக்கு அகற்றினார். இதற்கு, ஒன்றிய அதிகாரிகள் அனுமதி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பகுதிவாசிகள், ஓடுகளை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காலை, 11:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நாமக்கல் தாசில்தார் சுகுமார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'ஓடுகளை பிரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X