ஜெ., மறைந்த துக்கத்தில் விரலை வெட்டிய தொண்டர் - Jayalalitha | Dinamalar

ஜெ., மறைந்த துக்கத்தில் விரலை வெட்டிய தொண்டர்

Added : டிச 06, 2016 | கருத்துகள் (4)
திருப்பூர்: முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கம் தாங்க முடியாமல், திருப்பூர், அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், தன் சுண்டு விரலை வெட்டிக் கொண்டார். திருப்பூர் மாவட்டம், உகாயனுாரைச் சேர்ந்தவர், மாகாளி, 40; பனியன் தொழிலாளி. அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசியான மாகாளி, ஜெயலலிதா இறந்த தகவலறிந்து, மன வருத்தத்துடன் காணப்பட்டார். நேற்று மதியம், வீட்டில் இருந்த அரிவாளால், தன் இடது கை சுண்டுவிரலை,
ஜெ., மறைந்த துக்கத்தில் விரலை வெட்டிய தொண்டர்

திருப்பூர்: முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கம் தாங்க முடியாமல், திருப்பூர், அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், தன் சுண்டு விரலை வெட்டிக் கொண்டார். திருப்பூர் மாவட்டம், உகாயனுாரைச் சேர்ந்தவர், மாகாளி, 40; பனியன் தொழிலாளி. அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசியான மாகாளி, ஜெயலலிதா இறந்த தகவலறிந்து, மன வருத்தத்துடன் காணப்பட்டார். நேற்று மதியம், வீட்டில் இருந்த அரிவாளால், தன் இடது கை சுண்டுவிரலை, திடீரென்று வெட்டிக் கொண்டார். மாகாளியை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மாகாளி கூறுகையில், ''அம்மா இறந்ததை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மருத்துவமனையில், 75 நாட்கள் அவர் அடைந்த வேதனையை நானும் அனுபவிக்கவே, விரலை வெட்டிக் கொண்டேன்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X