1879 - டிசம்பர் 7
இளம் வயதில், தன் மீது பாய்ந்த புலியை, சிறு கத்தியை பயன்படுத்தி கொன்றார் ஜதீந்திரநாத் முகர்ஜி. இந்த சம்பவத்திற்கு பின், அவர், 'பாகா ஜதீன்' - டைகர் ஜதீன் என, அழைக்கப்பட்டார்.
தற்போதைய, வங்கதேசத்தின், நாதியா மாவட்டம், காயாகிராம் கிராமத்தில் பிறந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய, 'யுகாந்தர்' அமைப்புக்கு, தலைவராக செயல்பட்டார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், அவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
அரவிந்தரின் விடுதலை போராட்ட இயக்கத்தில் இணைந்து, அவரது வலதுகரமாக செயல்பட்டார். பரிந்தா கோஷுடன் இணைந்து, வெடிகுண்டு தொழிற்சாலையை உருவாக்கினார். நான்கு ஆங்கில ராணுவ வீரர்களை, தனி ஒருவனாக அடித்து நொறுக்கினார்.
இது வெளியே தெரிந்தால், ஆட்சிக்கு அவமானம் என, அவ்வழக்கை, நீதிபதி தள்ளுபடி செய்தார். 1915 செப்., 10ல் நடந்த, ஒரு மோதல் சம்பவத்தில், குண்டு பாய்ந்து இறந்தார்.
ஜதீந்திரநாத் முகர்ஜி பிறந்த தினம் இன்று!