அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவிரி நினைவு தூணை
திறக்காமல் கண் மூடிய ஜெ.,

மேட்டூர்:காலமான முதல்வர் ஜெயலலிதா, தன் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி யாக கருதிய காவிரி நினைவு துாணை, திறக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

 காவிரி நினைவு தூணை திறக்காமல் கண் மூடிய ஜெ.,

'தமிழகத்துக்கு, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்' என, 2007 பிப்., 5ல், காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு கூறியது; ஆனால், தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படவில்லை.

எனினும், 2011ல் ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., அரசு கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, மத்திய அரசு, 2013 பிப்., 19ல், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.

இதை தன், 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என, ஜெயலலிதா கூறினார்.

இதை பறைசாற்றும் வகையில், மேட்டூர் அணை பூங்காமுன், ஒரு கோடி ரூபாய் செலவில், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது தொடர் பாக, ஜெ., அறிக்கை பொறித்த நினைவு துாண்' கட்டு மான பணி, மார்ச்சில் துவங்கியது.

இந்த நினைவு துாணை திறந்து வைப்பதில், முதல் வர் ஜெயலலிதா மிகவும் ஆர்வத்துடன் இருந்துள் ளார். ஆனால், நினைவு துாண் கட்டி முடிப்பதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்தது, கட்சியினரை மட்டுமின்றி, விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஜெ., அறிக்கை


மேட்டூரில்அமைக்கப்படும் நினைவு துாண் கல்வெட் டில் செதுக்குவதற்காக, ஜெ., தயாரித்து அளித்த அறிக்கை: என்னை பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில், என் வாழ்க்கையில் கிடைத்த மகத்தான பிரம்மாண்ட வெற்றி இதுவே. என், 30 ஆண்டுகால அரசியல், பொதுவாழ்வில் இன்று தான், சாதனை

Advertisement

புரிந்ததாக நான் மனநிறைவடைகிறேன்.

நான் எவ்வளவோ சாதனைகள் செய்ததாக, எத்தனையோ பேர் பாராட்டினாலும், அதை நான் சாதனையாக கருதவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை,அரசிதழில் வெளி யிட செய்ததைத் தான் மகத்தான சாதனையாக கருதி, மனநிறைவு கொள்கிறேன். எனக்கும், என் தலைமையிலான அரசுக்கும்,காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்த மகத் தான வெற்றி இது. இவ்வாறு, அறிக்கையில் கூறியிருந்தார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - Chennai,இந்தியா
07-டிச-201618:37:55 IST Report Abuse

Tamil Selvanஆம், காவேரி தாய்க்கு க(த)ண்ணீரும் அஞ்சலி...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
07-டிச-201617:25:07 IST Report Abuse

Balajiஜெ வின் உடல் நிலை சிறிது தெரியாது என்று சொன்ன போதே இதை காணொளி மூலம் திறந்து வைக்க ஏற்பாடு செய்து அவரின் ஆசையை நிறைவேற்றியிருக்கலாம்.........

Rate this:
chris - Chennai,இந்தியா
07-டிச-201617:19:03 IST Report Abuse

chrisதண்ணீர் பாவம் இவர் ஆட்சியில் வரவே இல்லை . சட்ட ரீதியான வெற்றி ஆனால் விவசாயி தண்ணீர் கிடைக்கவே இல்லை ,

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X