சென்னை:போலீசார் எடுத்த சிறப்பான நடவடிக் கையால், மறைந்த முதல்வர்,
ஜெயலலிதா வின் இறுதி ஊர்வலம், சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், அமைதியாக
முடிந்தது.
ஜெயலலிதாவின் உடல், சென்னை, ராஜாஜி அரங்கத்தில்
வைக்கப்பட்டிருந்த இடத்தை சுற்றிலும், போலீசார் பலத்த பாதுகாப்பு
ஏற்பாடு கள் செய்திருந்தனர். சென்னை முழுவதும், 15 ஆயிரம் போலீசார்,
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்துக் கும், எவ்வித
இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த, ஜனாதிபதி, பிரதமர், பிற
மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் வந்த போது,
அவர்களுக்கு,போலீசார்
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
மாநிலம் முழுவதும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை நிகழாமல்
இருக்க, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், பல அதிரடி உத்தரவுகளை அவ்வப்போது
பிறப்பித்து வந்தார்.
அது போல், சென்னை போலீஸ்கமிஷனர், ஜார்ஜ், உயர்
போலீஸ் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, பாதுகாப்பில் சிறு தொய்வு கூட
ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.
ஜெயலலிதா காலமானதாக அறிவிக்கப்பட்ட நேரத் தில் இருந்து,
கமிஷனர் ஜார்ஜ், வீட்டுக்கு செல்லா மல், அப்பல்லோ மருத்துவமனை, போயஸ்
கார்டன், ராஜாஜி அரங்கம் போன்ற இடங்களுக்கு சென்று, கண்காணிப்பு மற்றும்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போலீசாருக்கு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமாக
இருந்தார்.
இதனால், சிறு அசம்பாவித சம்பவம் கூட ஏற்பட வில்லை.
அது போல, மாநில சட்டம் -ஒழுங்கு கூடு தல், டி.ஜி.பி.,
திரிபாதி, சென்னை கூடுதல் கமிஷனர் கள், தாமரை கண்ணன், சேஷசாயி, ஸ்ரீதர்,
சங்கர்; இணை கமிஷனர்கள், அன்பு, மனோகரன்; துணை கமிஷனர்கள், பாலகிருஷ்ணன்,
ஜெயக்குமார், சுதாகர் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள்,
இரவு, பகலாக
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்த போதிலும், வௌியூரில்
இருந்து வந்தவர்களுக் கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
போலீ சாருக்கும், உணவு உள்ளிட்ட உதவிகளை, மக்கள் ஆர்வத்துடன் செய்து
கொடுத்தனர். சமூக வலைதளங்களில் வௌியான பதிவுகள், இதற்கு பெரிதும் கை
கொடுத்தன. ஜெயலலிதா வுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வசதிக் காக, தெற்கு
ரயில்வே, சென்னை, கடற்கரை - திருமயிலை இடையே, 20 சிறப்பு ரயில்களை
இயக்கியது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (32)
Reply
Reply
Reply