பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஊர்வலம் முதல் நல்லடக்கம் வரை!

* 4:15 - ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டி ருந்த கண்ணாடி பெட்டி மூடப்பட்டு, ஊர்வல மாக எடுத்துச் செல்ல, ராணுவ வாகனத்துடன் இணைக்கப்பட்டிருந்த வண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது

 ஊர்வலம் முதல் நல்லடக்கம் வரை!

* 4:20 - வண்டியில் உடல் ஏற்றப்பட்டதும், ராணுவ வாகனத்தில், ஜெ.,யின் தோழி சசிகலா மற்றும் அவரின் இரு உறவினர்கள் அமர்ந்தனர்
* 4:21 - இறுதி ஊர்வலம் துவங்கியது. அமைச்சர் கள் நடந்து சென்றனர்; ஏராளமானோர் பின்தொடர்ந்தனர்
* 5:25 - மெரினா கடற்கரையை, ஊர்வலம் அடைந்தது
* 5:42 - கண்ணாடி பெட்டியிலிருந்து, உடலை எடுத்த ராணுவ வீரர்கள், சந்தன பெட்டியில் வைத்தனர்
* 5:45 - தமிழக கவர்னர்,வித்யாசாகர் ராவ், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்
* 5:48 - மத்திய அமைச்சர், வெங்கையா நாயுடு, மலர் வளையம் வைத்தார்
* 5:51 - மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக முதல்வர், பன்னீர்செல்வம் போன்றோர் மலர் அஞ்சலி செலுத்தினர்
* 5:52 - லோக்சபா துணை தலைவர் தம்பி துரை, தமிழக சட்டசபை சபாநாயகர், தனபால், மலர் அஞ்சலி செலுத்தினர்
* 5:54 - தமிழக முன்னாள் கவர்னர், ரோசையா, அஞ்சலி செலுத்தினார்
* 5:55 - காங்., துணை தலைவர் ராகுல், பொதுச் செயலர், குலாம் நபி ஆசாத், தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசு அஞ்சலி செலுத்தினர்
* 5:56 - ஜெ., உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை, முப்படை வீரர்கள் எடுத்து, சசிகலாவிடம் கொடுத்தனர்
* 5:59 - சம்பிரதாய முறைப்படி, இறுதி சடங்கு கள் நடந்தன. சசிகலாவுடன், ஜெ., அண்ணன் மகன், தீபக்கும் பங்கேற்றார்
* 6:03 - உடல் வைக்கப்பட்டிருந்த சந்தன பேழை

மூடப்பட்டது
* 6:05 - முப்படை வீரர்கள், 21 துப்பாக்கி குண்டு கள் முழங்கினர்
* 6:06 - உடல் வைக்கப்பட்டிருந்த சந்தன பேழை குழியில் இறக்கப்பட்டது
• 6:09 - சந்தன பேழை மீது சசிகலா,கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சந்தன கட்டைகளை போட்டனர்
* 6:17 - ஜெ., உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடைசி தருணங்கள்...: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்வில் பதிவான கடைசி சம்பவங்களில் சில.

வேதா இல்லம்


போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் தான் இவரது இல்லம். இங்கு கடைசியாக செப். 22ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. டிச. 6ல் இவரது உடல் இறுதியாக வேதா நிலையம் வந்தது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை


தமிழக தலைமை செயலகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ளது. இங்கு கடைசியாக செப்., 21ல், 200 புதிய அரசு பஸ்களை தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்றார்.

சந்தித்த பொதுமக்கள்


கடந்த செப்., 21ல், தலைமை செயலகத்தில் நீலகிரி பெண் தோட்டத் தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்கினார். இவர்கள் தான் ஜெ.,வைச் சந்தித்த கடைசி பொதுமக்கள்.

கடைசி மரியாதை


கடந்த செப்., 17ல் பெரியாரின் 138வது பிறந்த நாளுக்கு மலர் துாவிமரியாதை செலுத்தினார். இதுவே இவர் தலைவர்களுக்கு செய்த கடைசி மரியாதை.

கடைசி இரங்கல்


கடந்த நவ., 22ல் மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இரங்கல் தெரிவித்து கடைசி அறிக்கை வெளியிட்டார்.
கடைசி கையெழுத்து: திருச்சி, தஞ்சை,

Advertisement

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் 'பி--பார்ம்'-ல் அ.தி.மு.க பொதுச் செயலர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்துப்போட வேண்டும்.

அதில் பெருவிரல் ரேகை வைத்தி ருந்தார். பின் நவ., 22ல் தேர்தல் வெற்றிக்காக ஜெ., வெளி யிட்ட அறிக்கையில் கையெழுத்து இடம் பெற்றிருந்தது.இது அவரது கடைசி கையெழுத்து.

கடைசி நாட்கள்


செப்., 22ல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் உயிர் பிரிந்த டிச. 5 வரை 75 நாட்கள் அப்பல்லோவில் தான் இருந்தார்.

சட்டசபை உரை


ஜெயலலிதாவின் கடைசி சட்டசபை நிகழ்ச்சி யாக, பட்ஜெட் கூட்டத்தொடர் அமைந்தது. ஆக., 1 முதல் செப்., 2 வரை கூட்டத்தொடர் நடந்தது. இதில் அவர் பேசியதே சட்டசபையில் கடைசி பேச்சு.

தேர்தல் பிரசாரம்


சட்டமன்றத் தேர்தலுக்காக(2016), சென்னை யின் புறநகர் பகுதிகளில் மே 14ல் வேன் மூலம் கடைசியாக பிரசாரம் செய்தார்.

சட்டசபை தொகுதி


கடைசியாக ஆர்.கே.நகர் சட்டசபை(2016) தொகுதியில் போட்டியிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - Chennai,இந்தியா
07-டிச-201619:22:28 IST Report Abuse

Tamil Selvanஅம்மா ஒரு சகாப்தம்...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
07-டிச-201617:28:14 IST Report Abuse

Balajiஇவரின் மறைவை அமெரிக்காவில் வெளியாகும் மிகப்பெரிய நாளேடு முதல் பக்கத்தில் ஜெ வின் படத்துடன் பிரசுரித்திருக்கிறது........ உலகத்தை தன் பால் ஈர்த்த தலைவி தான் ஜெ......

Rate this:
christ - chennai,இந்தியா
07-டிச-201614:27:08 IST Report Abuse

christஜெயா வீழ்வதற்கு காரணமான மாபியா கும்பல்கள் வீழ்த்த பட வேண்டும் .

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X