"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா" ஜெயலலிதாவுக்கு இளையராஜா இசைஅஞ்சலி ? - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா" ஜெ.,வுக்கு இளையராஜா இசைஅஞ்சலி ?

Updated : டிச 08, 2016 | Added : டிச 08, 2016 | கருத்துகள் (31)
Advertisement
ஜெ.,  இளையராஜா சோக கீதம்

சென்னை: மறைந்த ஜெ.,வுக்கு, பாடலாசிரியர் அஸ்மின் இயற்றி, வர்சன் இசை அமைத்து, இளையராஜா பாடியது போல் ஒரு இந்த பாடல் இணையதளம் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் கேட்டு வருகின்றனர்.
மறைந்த ஜெ., உடலுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரை உலகத்தினர் இளையராஜா, ரஜினி உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் இந்த பாடல் வர்சன் என்பவர் பாடிய பால் என்றும், இது இளைராஜா குரல் போல் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பாடல் ஜெ .,வுக்கு இளையராஜா இசை சமர்ப்பணம் செய்ததாக வைரலாக தகவல் பரவியது.

" வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,

தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,"
என்று துவங்கும் இந்த பாடலில் அம்மா , அம்மா என்று ஒவ்வொரு வரிக்கும் முடிகிற படி அமைக்கப்பட்டுள்ளது. " நெஞ்சுக்குள் நிம்மதி போனதம்மா " என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது முழு சோகத்தை உணர முடிகிறது.


அனுபல்லவி:


யாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா
உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா
தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா
பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., - (வானே இடிந்.,)

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DINESH - Muscat,ஓமன்
08-டிச-201615:19:03 IST Report Abuse
DINESH அருமை
Rate this:
Share this comment
Cancel
Mani Maran - Kuala Lumpur,மலேஷியா
08-டிச-201615:05:20 IST Report Abuse
Mani Maran ஹலோ தினமலர், இந்த பாடல் பாடியது இசை அமைப்பாளர் வர்ஷன் தான். இது இளையராஜா சார் பாடியது கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
08-டிச-201615:04:16 IST Report Abuse
thamodaran chinnasamy இளையராஜா அவர்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் . சகோதரியாய் இருந்து என் அன்னை ஆகிய '' அன்னை ஜெயலலிதா''விற்கு உங்கள் இசை அஞ்சலிக்கு என்னுடைய ,எம்முடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை உரித்தாக்குகின்றேன். அன்னையின் புகழ் உள்ள மட்டும் உம புகழும் நிலைக்கட்டும்.''நன்றியுடன் சின்னசாமி தாமோதரன்''.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X