அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா சமரசம், போர்க்கொடி, துணை பொதுச்செயலர் பதவி, செங்கோட்டையன்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், ஜெய லலிதாவின் தோழி சசிகலா, சமரசம் செய் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா சமரசம், போர்க்கொடி, துணை பொதுச்செயலர் பதவி, செங்கோட்டையன்

இதன்படி தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய வர்களுக்கு, கட்சியில் புதிதாக துணைச் செயலர் பதவியை உருவாக்கி வழங்கவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டை யனுக்கு மந்திரி சபையில் இடம் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மறைந்த ஜெயலலிதா வகித்த பொதுச் செயலர் பதவி, அ.தி.மு.க.,வில் காலியாக உள்ளது. கட்சியில் அதிகாரம் மிகுந்த பதவி என்பதோடு, பொதுச் செயலராக வருபவர், முதல்வராக
வர வாய்ப்பு அதிகம் என்பதால் அப்பதவியை பெற போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்ததும், உடனடியாக முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், அமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தை முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்தனர். சசிகலா குடும்பத்தினர், அமைச்சர், எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு

செய்ய திட்டமிட்ட நிலையில் பன்னீர் செல்வத்திற்காக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலராக யாரை தேர்வு செய்வது என்ற பேச்சு எழுந்தது. சசிகலா பொதுச் செயலர் பதவிக்கு முன்னிறுத்தப் பட்டார். இதற்கு கொங்கு மண்டல எம்.எல்.ஏ., க்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

பொதுச் செயலர், முதல்வர் என முக்கிய பதவிகள் இரண்டிலும், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களே இருப்பதை ஏற்க முடியாது. பொது செயலர் பதவியை கவுண்டர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதை ஏற்க மறுத்த சசிகலா குடும்பத்தினர், சசிகலாவை பொதுச் செயலராக்க முடிவு செய்தனர். பின் அமைச்சர்களை அழைத்தனர். நேற்று காலை 10:40 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், மதுசூதனன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், போயஸ் கார்டன் சென்றனர். பகல் 1:00 மணிக்கு ஆலோசனை கூட்டம் முடிந்தது.

கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: சசிகலாவை பொதுச் செயலராக தேர்வு செய்ய, கட்சியிலும், அவரது குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

அமைச்சர்களை அழைத்து பேசிய சசிகலா, குடும்ப பிரச்னையை நான் பார்த்துக்

Advertisement

கொள்கிறேன். உங்களுக்குள் பிளவு வேண்டாம் எனஅறிவுறுத்தினார்.

கொங்கு மண்டலத்தினரை சமாதானப்படுத்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து பேசினார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

மேலும் கட்சியில் துணைப் பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவி, கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்படும் என, உறுதி அளித்துள்ளார்.அதை அனைவரும் ஏற்று, சமாதானமாகி உள்ளனர்; எனவே அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. மத்திய அரசு தலையிட்டால் மாற்றம் ஏற்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

ஆர்.கே.நகரில் சசிகலா?


சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஆறு மாதங் களுக்குள் இடைதேர்தல் நடத்தபட வேண்டும். அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட உள்ள சசிகலா இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா குடும்ப வட்டாரம் கூறியதாவது ஆர்.கே.நகரில் சசிகலா போட்டியிடுவது உறுதி. அவரது குடும்பத்தினரில், சசிகலா கணவர் நட ராஜன், தம்பி திவாகரன் தவிர, வேறு யாரும் கட்சி மற்றும் ஆட்சியில் தலையிட மாட்டார் கள். டில்லி அரசியலை, நடராஜன் கவனிப்பார். தமிழக அரசியலையும் ஆட்சி யையும், சசிகலா கவனிப்பார். அவருக்கு திவாகரன் உதவி செய்வார். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (225)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil - cbe,இந்தியா
12-டிச-201622:37:48 IST Report Abuse

senthilகட்சி வேணும், பதவி வேணும்.. அப்ப ஊழல் கேஸ்ல தண்டனை வந்தா என்னம்மா பண்ணுவீங்க... அத மறுக்கமா ஒத்துக்குவீங்களா இல்லை ஒதுங்குவீங்களா பார்க்கத்தானே போறோம்..

Rate this:
senthil - cbe,இந்தியா
12-டிச-201622:37:23 IST Report Abuse

senthilயார் வேண்டுமானாலும் பதவிக்கு வாங்க வராமல் போங்க... சொத்தை ஆட்டைய போடுங்க சும்மா இருங்க, ஆனா கடவுள்னு ஒருத்தன் இருக்கான் அவன் கணக்கே வேற... ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே நிம்மதியா சாக விடலையே காலன்... அவங்க இறந்து நாலு நாள் கூட முடியல அதுக்குள்ள அத்தனையும் மறந்துட்டு கட்சி எனக்கு, ஆட்சி எனக்கு, நான்தான் பொது செயலாளர்..... என்ன என்ன உங்க வில்லத்தனம் இருக்குமோ ... எல்லாம் மிகச்சில காலம்தான்... ஆனா என்ன தான் அடிச்சாலும் புடிச்சாலும் ஒரே கட்சிக்கு அதுவும் அம்மா கட்சிக்குதான் ஓட்டு, அய்யா கட்சிக்குத்தான் எங்க ஓட்டு என்று இல்லாமல், மனத்தெளிவு கொண்டு ஓட்டு போடும் குணம் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர் என்பதை மனதில் கொள்ளவும்... அவர்கள் தீர்மானிப்பார்கள் அவர்களை யார் ஆள வேண்டும் யார் ஆள கூடாது என்பதை... அவர்களால் தான் ஒவ்வொரு முறையும் நீங்கள் இரு கொள்ளை கொள்கை கழகங்களும் மாறி மாறி ஆட்சி செய்ய முடிந்தது... இதில் ஜெ திறைமையான (சற்று கொள்ளை கம்மியாக அடிக்க கூடியவர்) ஒருவர் என்பதும் உண்மை.... நிலைமை இவ்வாறு இருக்க பதவிக்கு அடிதடி வேறு... புலியை பார்த்து பூனையும் தன் உடம்பில் சூடு போட்டு கொண்டாலும் புலி எது பூனை எது என்பது பார்ப்பவருக்கு தெரியும்.... யார் வந்தாலும் நாங்கள் ஓட்டு போட்டால் தான் நீங்கள் நாடாள முடியும்... அப்ப வைக்கிறோம் பாருங்க எங்க ஆப்ப... சும்மா அதிருமுல்ல...கண்ணு, காது, மூக்கு , எல்லாம் பிச்சிகிட்டு போகும்போது தெரியும் பாருங்க ஒரு தெளிவு அது.... உச்ச கட்ட ஜென் நிலை...

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-டிச-201602:05:01 IST Report Abuse

மதுரை விருமாண்டிJADMK தான் இனி தமிழ்நாட்டை "காப்பாற்றும்"..

Rate this:
Anandan - chennai,இந்தியா
10-டிச-201621:48:54 IST Report Abuse

Anandanஇல்லைங்க, SADMK வாக மாறி போச்சு. ...

Rate this:
மேலும் 221 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X