அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., வெற்றிடத்தை நிரப்ப பிரேமலதா
வலைதளங்களில் தே.மு.தி.க., காமெடி

பிரேமலதாவை முன் வைத்து, தே.மு.தி.க., வினர் சமூக வலைதளங்களில் செய்து வரும் பிரசாரத்தை, பலரும் காமெடியாக ரசிக்க துவங்கி உள்ளனர்.

 ஜெ., வெற்றிடத்தை நிரப்ப பிரேமலதா வலைதளங்களில் தே.மு.தி.க., காமெடி


தே.மு.தி.க.,வில், முக்கிய பொறுப்பில் இல்லா விட்டாலும், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, செயல் தலைவர் போல செயல்பட்டு வருகிறார். கட்சியின் பின்னடைவுக்கு அவரே

காரணம் எனக்கூறி, முக்கிய நிர்வாகிகள், பிற கட்சிகளுக்கு தாவி விட்டனர்.

சமீபத்தில் நடந்த, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் சட்டசபை தொகுதிதேர்தல்களில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்ததால், கட்சியின ரின் கோபம், பிரேமலதா பக்கம் திரும்பியது. அவரை யும், அவரது சகோதரர் சுதீஷை யும், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் இறந்த பின், புதிய பிரசாரத்தை, தே.மு.தி.க., நிர்வாகி கள் சிலர் கையில் எடுத்துள்ளனர். 'தமிழக அரசிய லில், ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றி டத்தை நிரப்பத் தகுதியான நபர் பிரேமலதாவே' என, தகவல் பரப்பி வருகின்றனர்.

பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆலோசனை படியே, இப்பிரசாரத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்

Advertisement

படுகிறது. ஆனால், விஜயகாந்தின் தீவிர விசுவாசிகளுக்கு இதில் உடன்பாடு இல்லை. பார்வையிடும் அரசியல் கட்சியினர் உட்பட பலரும், இந்த பிரசாரத்தை காமெடியாக பார்க்க துவங்கியுள்ளனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
zinnah - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201612:50:12 IST Report Abuse

zinnahகடத்த எலெக்ஷனில் எல்லா கட்சிகளிடம் பேரம் பேசி கடைசிய மக்கள் நல கூட்டணிக்கு போய் அனைத்து தொகுதிகளிலும் தோற்று கட்சியில் இருக்கும் கொஞ்ச நஞ்ச உறுப்பினர்களையும் இழந்து இன்று கேட்பாரற்று நிக்கும் கட்சி, இருக்கும் உறுப்பினர்களை தக்க வைத்து கொள்ள எதாவது வழி தேட முயற்சி செய்யவும் , ஜெவின் வெற்றிடத்தை நிரப்புவதை விட்டு விட்டு உங்கள் கட்சியின் உறுப்பினர்களை நிரப்ப முயற்சி செய்யவும்

Rate this:
10-டிச-201604:02:16 IST Report Abuse

suragopalanகோவை சரளாவுக்கு வேணும்னா போட்டி போடலாம், அம்மாக்கு நிகரா முடியாது.....

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-டிச-201602:39:51 IST Report Abuse

மதுரை விருமாண்டிஅந்த காட்டுக்கு புலி தான் ராணியும். அந்தப் புலிக்கு ஒரு நாரி - சாரி, நரி நண்பியாம்.. அது புலியை கூட இருந்தே தந்திரமா கொன்னுடுச்சாம். இனிமே தான் தான் நாட்டுக்கு ராணின்னு சொல்லிச்சாம். அப்போ சைடுலே போய்க்கிட்டு இருந்த பூனை ஒண்ணு நான் வேண்டுமானா ராணியாகலாமான்னு வாட்ஸாப்ப்புலே மக்களுக்கு மெசேஜ் விட்டதாம். மக்களே புலியைக் கொன்ன நரி தேவலையா?

Rate this:
மேலும் 79 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X