பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீடு,
அலுவலகத்தில் 'ரெய்டு': 120 கிலோ தங்கம்,
ரூ.90 கோடி ரொக்கம் சிக்கியது

அ.தி.மு.க., பிரமுகரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரு மான சேகர் ரெட்டி, அவரது சகோதரர் சீனிவாச ரெட்டி மற்றும் அவர்களின் நண்பர்களுக்குச் சொந்தமான, வீடு, அலுவலகங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

 கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகத்தில் 'ரெய்டு'120 கிலோ தங்கம், ரூ.90 கோடி  ரொக்கம் சிக்கியது

சென்னை, வேலுார் உள்ளிட்ட, எட்டு இடங்க ளில் நடந்த இந்தச் சோதனையில், 120 கிலோ தங்கக் கட்டிகள், 90 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. தமிழகத்தில், தனியார் கல்லுாரி கள், முன்னாள் அமைச்சர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள், தங்க நகைக் கடைக ளில், வருமான வரி அதிகாரிகள், தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள, தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், நேற்று சோதனை நடத்தினர். இது தவிர, அவரது சகோதரர் சீனிவாச ரெட்டி, நண்பர்கள் பிரேம் ரெட்டி மற்றும் ராகவேந்திர ரெட்டி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டது. இதில், கணக்கில் வராத, ஏராளமான தங்கக் கட்டிகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சிக்கியது எப்படி?


இது குறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகள் கூறிய தாவது:சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, பிரேம் ரெட்டி என்பவரது வீட்டில் தங்கக் கட்டி கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு, நேற்று சோதனையிட்டோம்; ஏராளமான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக,சேகர் ரெட்டிக்குச் சொந்த மான, சென்னை, தி.நகர், யோகாம்பாள் தெரு வில் உள்ள வீடு, பசுல்லா சாலை உள்ளிட்ட இடங்களில்உள்ள அலுவலகங்களில் சோதனைநடத்தினோம். மேலும், பல தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது

தெரியவந்தது.

இதேபோல, வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் உள்ள வீடு, வி.ஐ.டி., பல்கலை அருகேயுள்ள வீடு மற்றும் பெங்களூரில் உள்ள சேகர் ரெட்டியின் அலுவலகம் என, 10 இடங்களில் சோதனை நடந்தது. இதில், சேகர் ரெட்டி மற்றும் பிரேம் ரெட்டி வீடுகளில் இருந்து, 120 கிலோ தங்கக் கட்டிகள், 90 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது; இவற்றின் மொத்த மதிப்பு, 130 கோடி ரூபாய். முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்திற்கு நெருக்கடி!


ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தது முதல், தமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,விற்கும், சசிகலா குடும்பத்திற்கும் நெருக்கமான நபரை குறி வைத்திருப்பதன் மூலம், மறைமுக நெருக்கடி தருவது உறுதியாகிஉள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே, நத்தம் விஸ்வநாதன் வீட்டில், தேர்தல் பண பதுக்கல் தொடர்பாக, வருமான வரி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.8 கோடிக்கு புது நோட்டு!


சோதனையில் சிக்கிய, 90 கோடி ரூபாயில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளன. அதில், 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும், எட்டு கோடி ரூபாய் அளவுக்கு இருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

வி.ஐ.பி.,க்களுக்கு லட்டு!


வருமான வரி சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டி, 'ஜே.எஸ்.ஆர்., இன்ப்ரா' மற்றும், 'வைபவ் குழுமம்' என்ற, நிறுவனங்களை நடத்தி வருகிறார். வேலுார் மாவட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார். திருமலை அறங்காவலர் குழுவில் இடம் பெறுவதற்கு முன், சென்னை,தி.நகரில் உள்ள திருமலை தேவஸ்தான அறங் காவலர் கமிட்டியில், நான்கு ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளார். அப்போதில் இருந்து, அமைச்சர்கள் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு, ஒவ்வொரு சனிக்கிழமை யும், திருப்பதி லட்டு கொடுப்பது, இவரது வழக்கம்.

சிறையில் ஜெ., பரிந்துரை!


திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினர் குழுவில் இடம்பெற்ற, தமிழகத் தைச் சேர்ந்த மூன்று பேரில், சேகர் ரெட்டி மட்டும் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட வர்.ஓராண்டு நீட்டிப்பில் உள்ள அவருக்கு, ஏப்ரலுடன் பதவிக்காலம்

Advertisement

முடிகிறது.

அக்குழுவில், ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிர மாநிலத்தவர்களும் உறுப்பினராக உள்ளனர். கடந்த, 2014ல், பெங்க ளூரு சிறையில், ஜெயலலிதா இருந்த போது, அவரிடம் ஒரே ஒரு கோப்பிற்கு மட்டும் ஒப்பு தல் பெறப்பட்டுள்ளது. அது, சேகர் ரெட்டியை அறங்காவலர் குழு பதவிக்கு பரிந்துரைக்கும் கோப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது, அவரை பரிந்துரைத்தவர், தற்போது, தமிழக அரசின் மிக உயரிய பொறுப்பில் இருக் கிறார். அமைச்சர் ஒருவருக்கும், சசிகலா உற வினரான டாக்டருக்கும் நெருக்கமான இவர், தற்போது, கோட்டையில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மணல் குவாரி, ரியல் எஸ்டேட்...


வேலுார் மாவட்டம், தொண்டான் துளசி கிராமத்தைச் சேர்ந்தவர், சேகர் ரெட்டி. இவர், அ.தி.மு.க., வில் முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர். முந்தைய அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மின் துறையில், பல்வேறு பணி ஒப்பந்தங்களை பெற்றுள்ளார்.

முக்கியமாக, மணல் குவாரி கான்ட்ராக்டில், கொடி கட்டி பறந்துள்ளார். மேலும், ரயில்வே கான்ட்ராக்ட் பணிகளையும் மேற்கொண்டவர். தற்போது, கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ள தாக தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Chennai,இந்தியா
10-டிச-201602:42:52 IST Report Abuse

Ramதிருப்பதி லட்டு நல்லா இருக்கு. நல்லா வேலை செய்யுது லட்டு வாங்கிக்கிட்டவங்களாம் அதன் சுவையை அனுபவிக்கறதுக்குள்ள எல்லா வேலையும் செய்யுது. திருப்பதி சாமி அதை கூட்டு போட்ட அத்தனை சாமிகளையும் தண்டிக்க ஆரம்பிச்சி சாம்பிள் காட்டி இருக்கு. கடவுள் (திருப்பதியில்) நின்று கொல்லுகிறார்.

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-டிச-201602:19:58 IST Report Abuse

மதுரை விருமாண்டி//90 கோடி ரூபாயில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளன. அதில், 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும், எட்டு கோடி ரூபாய்// திருப்பதி உண்டியலில் போடப்பட்ட பணத்தை மாற்றிக் கொண்ட பல ஆயிரம் பிரமுகர்களின் இவரும் ஒருவர்.

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-டிச-201602:18:34 IST Report Abuse

மதுரை விருமாண்டி//014ல், பெங்களூரு சிறையில், ஜெயலலிதா இருந்த போது, அவரிடம் ஒரே ஒரு கோப்பிற்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அது, சேகர் ரெட்டியை அறங்காவலர் குழு பதவிக்கு பரிந்துரைக்கும் கோப்பு என்பது குறிப்பிடத்தக்கது. // - அம்ம்மாவோட ஆயிரம் பினாமிகளில் ஒருவர் போலும்..

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X