சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

பேச்சுரிமையும், பொய்ச் செய்திகளும்

Added : டிச 11, 2016
Advertisement
 பேச்சுரிமையும், பொய்ச் செய்திகளும்

தகவல் வெளியிடும் உரிமை குறித்து எல்லா நாடுகளும், தமது சட்டத்தில் சொல்லி இருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 19ல் அது அடிப்படை உரிமையாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்நிலையில் எது பேச்சுரிமை? எவை எல்லாம் செய்தியில் அடங்கும்? எவையெல்லாம் 'பேச்சு' எனும் வரையறைக்குள் வரும்? 'பேச்சும்' செய்தியும் ஒன்றா வெவ்வேறா?இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'பேச்சுரிமை' என்பது பேச்சு மட்டுமல்ல. சொல்ல நினைத்த ஒரு தகவலை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை. அதை, எப்படி எதன் மூலமும் வெளிப்படுத்தலாம். எழுத்தாகவோ, பாட்டாகவோ, கலைப்படைப்பாகவோ அவை இருக்கலாம். (freedom of speech and expression)அப்படியான 'தகவல்/கருத்து வெளிப்படுத்தும் உரிமையின்' கீழ்தான் பேச்சுரிமையும் வருகிறது.இதில் அதிகம் ஈடுபடுவது செய்தியாளர்களே…


செய்தியாளரின் திறமை

எங்கோ நடக்கும் ஒரு நிகழ்ச்சியை, அங்கு செல்ல வாய்ப்பில்லாதவர்களுக்கு தகவலாகத் தருவதே ஒரு செய்தியாளனின் கடமை. இதில் நடந்த நிகழ்வை அப்படியே சொல்லிவிட்டு, அதன் பின் அந்தச் செய்தியாளனது, அல்லது அந்தப் பகுதி மக்களது, அல்லது அந்தச் செய்தி சானலில் கருத்துக்களை, அல்லது அத்துறை சார்ந்த பிரபலர்களின் கருத்துக்களை வெளியிடுவது என்பது அவனது சாமர்த்தியம். அப்படி நிகழ்வும் தவிர மற்றவரது கருத்துகளை எடுத்துச் சொல்வதன் மூலமே அந்தச் செய்தியின் மீது மக்களின் பார்வையைப் பரவலாக விழச் செய்ய முடியும்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவில் பேச்சுரிமை என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. Protection of certain rights regarding freedom of speech etc:(1) All citizens shall have the right(a) To freedom of speech and expression:(b) To assemble peaceably and without arms;(c) To form associations or uions;(d) To move freely throughout the territory of India;(e) To reside and settle in any part of the territory of India and(f) Omitted(g) To practise any profession, or to carry on any occupation, trade or business


எதை வேண்டுமானாலும் பேசமுடியாது

அதன் பொருள் ஒருவன் தம் கருத்து எதையும் சொல்லலாம். இதன் மறை பொருள் என்னவெனில், அந்தக் கருத்து/தகவலால் பாதிக்கப்பட்டவர் ஏதேனும் எதிர் நடவடிக்கை எடுத்தால், புகார்அளித்தால், வழக்கிட்டால், அதற்கு அவன் பதில் சொல்ல வேண்டும். அந்த எதிர் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். உதாரணமாக, 'இன்ன அரசியல் கட்சித் தலைவர் கொள்ளையடித்தார்' என ஒருவன் செய்தி வெளியிடுவானாயின், அச் செய்தி உண்மை அல்ல என அக்கட்சித் தலைவர் நிருபித்து, தம் மீது அவதூறு பரப்பியதாக, அந்தச் செய்தியாளன் மீது அந்த அரசியல்கட்சித் தலைவர் புகார் அளிப்பாராயின் அதை அந்தச் செய்தியாளன் எதிர் கொள்ள வேண்டும்.இதன் மூலம், இந்திய அரசியலமைப்புச் சட்டம், பேச்சுரிமையை அடிப்படை உரிமையாகச் சொன்னாலும், மறைமுகமாக, எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று பொருள் இல்லை என்றும் சொல்லிவிடுகிறது.


எது பேச்சுரிமை...?

அதே போல சொல்லும் செய்தி, உண்மையாகவே இருந்தாலும், அச்செய்தி, நாட்டின் இறையாண்மைக்குக் குந்தகம் ஏற்படும் என்ற சூழல் இருந்தாலோ, நாட்டிற்குள் கலவரத்தை ஏற்படுத்தும் எனும்படி இருந்தாலோ, அவை அரச நிந்தனை போன்றவையாக இருப்பின், அவை பேச்சுரிமையின் கீழ் வராது. ஆனால், எந்த செய்தியையுமே பேச்சுரிமையையை அழிக்க வகை செய்யும்படி அதை அரச நிந்தனை என ஆக்கவும் பல சமயங்களில் முடிகிறது.இந்நிலையில் எந்த சாதாரண செய்தியையும் கூட மக்களிடம் பேச்சினை வளர்ப்பதாக அவர்கள் பார்வையில் படுவதற்காக, செய்தி சொல்லும் விதத்தில் அதை ஒரு சென்ஸேஷனல் செய்தியாக்க முடிகிறது. அதே போல, மிகப் பெரிய உண்மைச் செய்தியையும் சாதாரணமானதாக ஆக்கவும் முடிகிறது.இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடியாக பேச்சுரிமை என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.பொதுவாக ”தகவல் வெளியிடும் உரிமை” என்பதில் அடுத்தவரைப் பற்றிய அவரது பெயருக்கு களங்கம் உண்டாக்கும் பேச்சுகளை மட்டுமே தவிர்க்கவோ, அல்லது, அதனால் ஏற்படும் இடர்களை சந்திக்கவோ, சட்டம் சொல்கிறது.


இட்டுக்கட்டிய செய்திகளும்(fake news), பொய்த் தகவல்களும்(false informations):

இல்லவே இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிச் சொல்வது வேறு(உதாரணமாக பாம்பு தலையுடன் பெண்). தலைவர் ஒருவர் உயிரோடு இருக்கையில் அவர் இறந்ததாகச் சொல்வது இவையே Fake news -க்கும், False Informations-க்கும்உள்ளவேறுபாடு.இவைஇரண்டிற்குமானவேறுபாட்டைநாம்அறிந்திருக்கவேண்டியகட்டாயத்தில்இருக்கிறோம். முன்னது, அதாவது ”இட்டுக்கட்டிச்சொல்லுதல்” என்பதே ஒருதனிகலையாக வளரஆரம்பித்துவிட்டது. பரபரப்புக்காகமக்களும், அதுபோன்ற செய்திகளை ரசிக்க ஆரம்பித்தாகி விட்டது. பலதொகுப்புகடைகளில்பில்போடும்இடத்தின் அருகில், கவுன்டரில் காத்திருக்கும் நேரங்களில் புரட்டுவதாக செய்தித்தாட்களைப்போலவே நூற்றுக்கணக்கான, இட்டுக்கட்டியசெய்திகள்வரிசைகட்டிநிற்கின்றன. இது ரசனை, கலை என்றாகிவிட்டதால், இதற்கும்வேண்டுமென்றேசொல்லப்படும்பொய்ச்செய்திகளுக்கும்உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்திருத்தல்வேண்டும். ஏனெனில்பின்னதுமட்டுமேபாதிப்புக்குவழிவகுக்கும். அதனாலேயே அவைசட்டக்கட்டுக்குள்வரவேண்டியதாகிறது.அநேக நாடுகளும் செய்தி எனும் பெயரில் பொய்ச் செய்தியைப் பகிரும் செய்தியாளர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், அவர்களால் சொல்லப்படும் தகவலானது ஒருவர் பெயருக்கு களங்கமே ஏற்படுத்தவில்லை எனினும், பொய்யான தகவல்களைத் தரக்கூடாது என சட்டத்தின் மூலம் சொல்லி இருக்கின்றன. தனியான சிறப்புப் பிரிவுகளும் பொய்ச் செய்தி பற்றிப் பேசுகின்றன.


செய்தி வேறு... பேச்சு வேறு...

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, 'செய்தி' என்பதற்கும், 'பேச்சு' என்பதற்குமான வேறுபாட்டை. செய்தி என்பது, அதற்கென நியமிக்கப்பட்ட, நியமித்துக் கொண்ட செய்தியாளர்களால் தரப்படும் செய்திகள். இவை பொதுவாக பத்திரிகை, தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம் பொதுசன பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பேச்சு எனும் தகவல் தொடர்பை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஒலிவடிவில் தகவல் பகிர்வது. இரண்டாவது, மக்களுக்குள் (அன் ரெகக்னைஸ்ட்) பேசிக் கொள்வது. ஒரு செய்தியாளர் விரும்பினால், ஒரு செய்தியை, 'செய்தி' எனும் தளத்திலிருந்து, மக்களின் 'பேச்சு' எனும் எல்லைக்குள் கொண்டு வர இயலும். அதே போல மாற்றியும் செய்ய இயலும்.உலக நாடுகளின் பிரச்னை:இந்தப் பொய்ச் செய்தி பிரச்னை உலக நாடுகள் அனைத்திற்கும் உள்ள பிரச்னைதான் எனினும், உலக நீதிமன்றம் எதிலும், பொய்ச் செய்திகள் பற்றி பெரிதாகத் தகவல் இல்லை. அது குறித்து உலக நீதிமன்றம் இன்னமும் பேசவே ஆரம்பிக்கவில்லை எனலாம். ஆனாலும், அவ்வப்போது ஐக்கிய நாடுகள் சபையில், மனித உரிமைகள் குறித்த பேச்சு வருகையில் எல்லாம் 'பொய்ச்' செய்திகள்' குறித்த விவாதம் நடப்பதுண்டுதான். அதிலும் குறிப்பாக, கிரிமினல் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பற்றி ஐநா.,வில் பேச்சு எழுகையில், பேச்சுரிமைக்கும், பொய்ச் செய்திகளுக்கும் உள்ள எதிர்மறைத் தொடர்பு பற்றி விவாதம் நடந்த்துண்டு.


சட்டத்தில் குழப்பம்

உண்மையில் சட்டத்தின் மிக மோசமான குழப்பமான பகுதி என இதைச் சொல்லலாம். ஏனெனில், தகவல் பகிரும்/வெளிப்படுத்தும் உரிமைச் சட்டமும், பொய்ச் செய்திகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. இதற்கான சட்டங்களை வரையறுக்கையில் கத்தி மீது நடப்பது போன்றே அமைக்க வேண்டும் “பொய்ச் செய்திகளுக்காக, ஒரு செய்தியாளர் தண்டிக்கப்படுவாரே ஆயின், அது தகவல் வெளிப்படுத்திடும் உரிமைக்கு எதிரானதாகுமா என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் காமரூன் தேசத்தில் உள்நாட்டு சட்டங்கள் குறித்த பேச்சின் போது விவாதிக்கப்பட்டது.உலக அரங்கில் பொய்ச்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு அளவுகோல், திட்டம் வருவது கேள்விக்குறியே. ஏனெனில், எது பொய்என்பதிலேயே முழு பிரச்சனையும் அடங்கி விடுகிறது.


பிரபலமான கண்டுபிடிக்கப்பட்ட் பொய்கள்:

அன்றைய பிரித்தனில், ஐரோப்பிய அரசுக்கும் கத்தோலிகன் சர்ச்சுக்கும், அந்த நிலப்பரப்பின் ஆட்சிமை குறித்த தகராறு. சட்டென கத்தோலிகன் சர்ச் ஒரு உபாயத்தைக் கையாண்டது. “Donation of Constantine” எனும் பெயரில் ஒரு தாஸ்தாவேஜு ஒன்றைக் கொணர்ந்தது. அதாவது, நான்காம் நூற்றாண்டில், கான்ஸ்டாண்டைனுக்கு வந்திருந்த குஷ்ட நோயை, அன்றைய போப் சில்வஸ்டர் குணப்படுத்தியதால் அந்த நிலப்பரப்பை, தானமாக்க் கொடுத்தாகவும், அதனால் அந்தப் பகுதியின் ஆட்சிமை சர்ச்சையே சாரும் எனவும் சொல்லப்பட்டு பிரச்னை முடிவுக்கு வந்தது.அந்த தாஸ்தாவேஜ் குறித்து எவரும் சந்தேகம் கொள்ளவே இல்லை. பதினைந்தாம் நூற்றாண்டு வரையும் கூட எவரும் அது குறித்து கேள்வி எழுப்பவே இல்லை. பதினைந்தாம் நூற்றாண்டிலேயே, அதில் இருந்த மொழியும், வார்த்தை தேர்வுகளும், வரி அமைப்பும் அன்றைய கான்ஸ்டாண்டைன் காலத்தியதல்ல என நிருபிக்கப்பட்ட்து. இதை ஒட்டி, சர்சும், 'இல்லையில்லை. அது கான்ஸ்டாண்டைன் கொடுத்ததல்ல. அதன் பின் சார்லிமேக்னே கொடுத்தது' என முணுமுணுத்துக் கொண்டது.அந்த டாக்குமெண்ட் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்ட போதிலும் இன்னமும் கூட சிலர் அதை உண்மை என மனதளவில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.


நேரு சொன்னது பொய்யா...?

இந்து முஸ்லீம் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தநேரம். அப்போது, காந்தி சுடப்பட்டார். இத்தகவல் நேருவிற்குத் தெரிவிக்கப்படுகிறது. சுட்டவன் யார் என நேருவிற்கு எந்தத் தகவலும் தெரியாது. சுடப்பட்டார் எனும் தகவல் கேள்விப்பட்டதும், அவர் சொன்ன வார்த்தை, 'சுட்டவன் இந்து”. ஏனெனில், அப்படிச்சொல்லி இருக்காவிட்டால், சரியான புரிதல் இல்லாமல் மதக்கலவரம் தீவிரம் ஆகிஇருக்க்கூடும். உண்மையில் நேரு சொன்னது, பொதுநன்மைக்காக அவர் இட்டுக்கட்டியது. அதிர்ஷ்டவசமாக அவர் சொன்னது உண்மையாயிற்று.சிலசமயங்களில், பொதுநன்மைக்காகவும், மக்கள் மனதைத் தயார்செய்யவும் கூட சிலபொய்கள் சொல்லப்படவேண்டியிருக்கிறது. இதனாலேயே, சட்டத்தால், சிலபொய்களை இறுக்கி நிறுத்த இயலாமல் போகிறது.
- ஹன்ஸா ஹன்ஸா(வழக்கறிஞர்); legally.hansa68@gmail.com

Advertisement




வாசகர் கருத்து

SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
15-ஜன-201908:39:14 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்ல சட்ட விளக்கம். தற்போது நம்நாட்டில் அரசியல் வாதிகள் இப்படியா நடந்து கொள்கிறார்கள். மனதில் பயமின்றி உளறுகிறார்கள். வீராப்புபேசினால் மக்கள் ஏமாந்து பேச்சை நம்பி நம்மை ஆதரிப்பார்கள் என் ற நப்பாசையில் அதற்கு ம் கைதட்டி அவரை ஊக்குவிக்கும் செயல்களும் நடக்காமல்இல்லை வழக்கு தொடுக்காமலும் இல்லை .தொடுத்தவழக்கு ஜவ்வு மாதிரி இழுத்து செல்லாமலும் இல்லை, என்ன சட்டமோ கோர்ட்டோ அரசியல் பேச்சோ போங்க ...வெறுப்பாக்குகிறது.
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
12-நவ-201709:46:43 IST Report Abuse
Chanemougam Ramachandirane நன்றி சட்ட விளக்கம் பற்றி தெளிவாக கூறியதற்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X