பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சேகர் ரெட்டி வீடுகளில் 'ரெய்டு' நிறைவு :
புயலால் ஆய்வு தள்ளி வைப்பு

மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை முடிந்தது. பறிமுதல் செய்தவற்றை மதிப்பிடும் பணி, புயலால், ஒத்தி வைக்கப்பட்டது.

சேகர் ரெட்டி வீடுகளில் 'ரெய்டு' நிறைவு : புயலால் ஆய்வு தள்ளி வைப்பு

அ.தி.மு.க., பிரமுகரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த, சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகளில், டிச. 7 முதல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அவரது சொந்த ஊரான, வேலுார் மாவட்டம் காட்பாடி, காந்தி நகரில் உள்ள வீட்டிலும், சோதனை நடந்தது.

செல்வாக்குஅவர், தமிழக அரசின் பல துறைகளில், கான்ட்ராக்ட் அடிப்படையில், பணிகளை செய்து வந்தவர். அதனால், அ.தி.மு.க., பிரமுகர்கள், அமைச்சர்கள் என,

ஆளுங்கட்சியினருடன் நெருக்கமாக இருப்பவர். முதல்வர் பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை அவரது செல்வாக்கு பரந்து விரிந்திருந்தது.

அவரது வீடுகளில் நடந்த சோதனையால்,சில இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் பீதியில் உள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுக்கள், 35 கோடி ரூபாய் சிக்கியதால், வங்கிகள் மற்றும் சில பைனான்சியர்களுக்கு தொடர்பு இருக்கும் என, சந்தேகம் எழுந்தது.

சோதனை நிறைவுஅதனால், சி.பி.ஐ., அதிகாரிகள், தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கியுள்ளனர். இந்நிலையில், சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனைகள் நிறைவடைந்துள்ளன.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:சேகர்ரெட்டி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடந்து வந்த சோதனை முடிந்து விட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில், இதுவரை, 132 கோடி ரூபாய் ரொக்கம், 177 கிலோ தங்கக்

Advertisement

கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புயலால், ஆய்வு நடைபெறவில்லை


அவற்றை இனி மதிப்பிட்டு, ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.மேலும், சிக்கிய நூற்றுக்கணக்கான ஆவணங்களை சோதனை செய்தால்தான், அதில் வேறு பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என, அறிய முடியும். புயலால், நேற்று ஆய்வு நடைபெறவில்லை; இன்று முதல் ஆய்வு துவங்கும். வருமானத்திற்கு அதிகமாக உள்ள சொத்துக்களுக்கு, அவர் வரி செலுத்த வேண்டும். பணம் வந்த வழியில் முறைகேடு இருப்பது உறுதியானால், சி.பி.ஐ., பார்த்துக் கொள்ளும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravana kumar - Chennai  ( Posted via: Dinamalar Android App )
13-டிச-201618:04:06 IST Report Abuse

saravana kumarநல்ல வேளை... மோடி தான் செயற்கையாக புயலை உருவாக்கிய சேகர் ரெட்டியை காப்பாற்றி விட்டார் என்று யாரும் சொல்லவில்லை..

Rate this:
mv murugan - coimbatore,இந்தியா
13-டிச-201621:22:00 IST Report Abuse

mv muruganகாங்கிரஸில் வெக்கமே இல்லாமல் இதையும் சொல்ல வாய்ப்பு உண்டு. ...

Rate this:
mv murugan - coimbatore,இந்தியா
13-டிச-201621:25:14 IST Report Abuse

mv muruganகாங்கிரஸ் சொல்லும்...... ...

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
13-டிச-201616:00:24 IST Report Abuse

ganapati sbwhatsaap இல் வந்தது போல, புதிய 2000 ரூபாயில் nano chip இருக்குமோ... தேசம் முழுவதும் பல இடங்களில் பதுக்கியவர்கள் பிடிபடுகிறார்களே.

Rate this:
zinnah - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201615:51:24 IST Report Abuse

zinnahசேகர் ரெட்டியை மாட்டிகிட்டார், 500 கோடியில் நடந்த கல்யாணம் சுரங்க ஊழல் ஜனார்த்தன ரெட்டியின் மீது எந்த வித நடவடிக்கைகளும் வெளியே வரவில்லையே அப்படியே அமுக்கி விட்டதா. அந்த மோடிக்கே வெளிச்சம். முதலில் ரெய்டுக்கு பிறகு எதுவும் கிடைத்ததா அல்லது கமிஷன் போய்விட்டதா

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X