சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் குடிநீரில் புழு : மக்கள் அதிர்ச்சி

Added : டிச 13, 2016
Share
Advertisement
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில், புழுக்கள் நெளிவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு காவிரி திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.ராமேஸ்வரம் வர்த்தகன் தெரு பொதுகுழாயில் நேற்று காலை கலங்கலாக தண்ணீர் வந்தது. தண்ணீரை பார்த்த போது ஏராளமான புழுக்கள்
ராமேஸ்வரம் குடிநீரில் புழு : மக்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில், புழுக்கள் நெளிவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு காவிரி திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.ராமேஸ்வரம் வர்த்தகன் தெரு பொதுகுழாயில் நேற்று காலை கலங்கலாக தண்ணீர் வந்தது. தண்ணீரை பார்த்த போது ஏராளமான புழுக்கள் நெளிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.குடிநீரில் வடிகால்களில் தேங்கியுள்ள கழிவுநீர், சேதமடைந்த பைப்புகள் வழி கலந்திருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்.நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா கூறுகையில்,“ குடிநீர் தேக்க தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் நகராட்சி பணியாளர்கள் மூலம் சுகாதாரத்துடன் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீரில் புழு உருவாக வாய்ப்பில்லை. இருப்பினும் குடிநீரில் கழிவு நீர் கலக்கிறதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்,” என்றார். நகராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்யாமல் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X