சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்சை வழிமறித்த யானைகள்

Added : டிச 13, 2016
Share
Advertisement
வால்பாறை : அரசு பஸ்சை வழிமறித்த யானைகளால் பயணிகள் பீதியடைந்தனர்.வால்பாறையை சுற்றியுள்ள சோலையார், சென்னியப்பா, காஞ்சமலை, வறட்டுப்பாறை, குரங்குமுடி, முருகன் எஸ்டேட், ஊசிமலை, அக்காமலை, பன்னிமேடு, சின்கோனா ராயான்டிவிஷன் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனிக்கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில் வால்பாறையிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு, 8:30 மணிக்கு, 60க்கும்

வால்பாறை : அரசு பஸ்சை வழிமறித்த யானைகளால் பயணிகள் பீதியடைந்தனர்.வால்பாறையை சுற்றியுள்ள சோலையார், சென்னியப்பா, காஞ்சமலை, வறட்டுப்பாறை, குரங்குமுடி, முருகன் எஸ்டேட், ஊசிமலை, அக்காமலை, பன்னிமேடு, சின்கோனா ராயான்டிவிஷன் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனிக்கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில் வால்பாறையிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு, 8:30 மணிக்கு, 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சின்கோனா-ரயான்டிவிஷனுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இரவு, 9:30 மணிக்கு கீழ்நீராறு அணைக்கும், ரயான்டிவிஷனுக்கும் இடையே உள்ள அடர்ந்து வனப்பகுதியின் மத்தியில் சென்று கொண்டிருக்கும் போது, 13 யானைகள் ரோட்டின் குறுக்கே நின்று வழிமறித்தது. இதைக்கண்ட பயணிகள் அலறினர்.பஸ்சை இயக்கிய டிரைவர் சக்தி, யானை வழிவிடும் வரை அமைதியாக பஸ்சை பின்னுக்கு தள்ளி நிறுத்தினார். சிறிது நேரம் நோட்டமிட்ட யானைகள் அரசு பஸ்சுக்கு வழிவிட்டு, வனப்பகுதிக்குள் புகுந்தன. அதே யானைகள் இரவு ரயான்டிவிஷன் எஸ்டேட் பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தின. தகவல் அறிந்த வனத்துறையினர் எஸ்டேட் தொழிலாளர்களுடன் இணைந்து யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X