அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலாவுக்கு சமூக வலைதளங்களில்
எதிர்ப்பு : அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி

அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துக்கள், அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

 சசிகலாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு  அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி

ஜெயலலிதா மறைவை அடுத்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர் ஏற்கனவே இரு முறை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் என்பதால், கட்சியில் சலசலப்பு ஏற்படவில்லை.
ஆனால், சசிகலா பொதுச் செயலராவார் என்ற தகவல், கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பர் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தங்கள் பதவியை இழக்க விரும்பாத மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஏழு நாட்கள் துக்கம் முடியும்முன், 'தலைமை ஏற்க வாருங்கள்' என, சசிகலாவை

சந்தித்து வலியுறுத்தினர்.

நேர் பாதியாக திகழ்ந்தவர் சசிகலாஇது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதற்கு
சசிகலா ஆதரவாளர்களும், பதில் அளித்து வருகின்றனர்.
'ஜெயலலிதா செயல்பாடுகளில், நேர் பாதியாக திகழ்ந்தவர் சசிகலா. அவருக்கு, நல்ல அரசியல் அனுபவம் உள்ளது. தற்போதைய நிர்வாகிகளை காட்டிலும், அதிக தலைமை பண்புடையவர்' என, அவரது புகழை பரப்பி வருகின்றனர். எதிர் தரப்பினரோ, 'சாக்லேட்டுடன் ஒட்டியிருந்த காகிதம் என்பதற்காக, காகிதத்தையும் சேர்த்து உண்ண முடியாது' என, பதில் அளித்துள்ளனர்.

1989 தேர்தலில்'ஜெயலலிதா முகத்துக்காக, யாரும் ஓட்டளிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்திற்காகவே மக்கள் ஓட்டளித்தனர்' என, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாக, தகவல் வெளியானது.
அதற்கு,'இரட்டை இலை சின்னம் இல்லாத, 1989 தேர்தலில், ஜானகியை விட, அதிக வாக்காளர்களை கவர்ந்து, வெற்றி பெற்றவர்

Advertisement

ஜெயலலிதா. சரி, சசிகலாவிற்கு ஆதரவு கொடுக்கும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஜெ., பிரசாரத்தால் வெற்றி பெற்றவர்கள். பதவியை, ராஜினாமா செய்து விட்டு, சசிகலாவை பிரசாரம் செய்ய சொல்லி, ஆட்சியை பிடியுங்கள் பார்ப்போம்' என, சவால் விட்டுள்ளனர்.
மேலும் சசிகலாவிற்கு ஆதரவாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை வெளியிட்டு, அதன் கீழ், 'எம்.ஜி.ஆர்., படத்துடன், சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்; ஒரு மானம் இல்லை; அதில் ஈனம் இல்லை. அவர் எப்போதும் வால்பிடிப்பார்' என, அவர் படத்தில் வந்த பாடலையே பதிவிட்டுள்ளனர்.
இதுபோல், சசிகலாவுக்கு எதிராக, ஏராளமான கேலி, கிண்டல் செய்யும், 'மீம்ஸ்'களை வெளியிட்டு வருகின்றனர். இது, சசிகலாவை முன்னிறுத்தும், அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (348)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
18-டிச-201606:13:42 IST Report Abuse

k balakumaranகூடா நட்பு கேடாக முடியும் என்பதற்கு வெளியில் மக்களின் அம்மாவாக மக்களுக்காக நான் என்று சிங்கம் போல கர்ஜித்த செல்வி ஜெயலலிதா வீட்டுக்குள் கோழை ஆக, மாபியாவின் கட்டுப்பாட்டில் இருந்து அப்போல்லோ மருத்துவ மனைக்கு கடத்தப்பட்டு உள்ளே நடந்தவற்றை அடி மட்ட தொண்டர்களுக்கு மறைத்து கால்களை இழந்து, உடலில் ஓட்டைகள் போடப்பட்டு, பற்களை இழந்த ஒரு பிணம் ஆக வெளியில் கொண்டு வரப்பட்டு மக்களை அருகில் சென்று பார்க்க விடாமல் மாபியா கும்பல் தடுத்து வைக்க வேண்டிய மர்மம் என்ன?? எவ்வளவு சித்திரவதை அனுபவித்தாரோ, தனது இறுதி ஆசை என்ன என்று சொல்ல விழைந்தாரோ எவரையும் பார்க்க விடாமல் மறைத்து அந்த ஆத்மா அலையும் படி சொத்துக்காக, பதவிக்காக கொலை செய்யப்பட்டு விட்டார். அம்மா திரவ உணவு உண்டார், எழுந்து பேசினார், உடல் பயிற்சி செய்தார் மீண்டும் திரும்பி வர போகிறார் என்று சரஸ்வதி பொய் சொல்லி மொட்டை அடித்து நேர்த்தி வைத்து, உயிரை மாய்த்து, மண் சோறு தின்று அம்மா நலம் பெற பிரார்த்தித்த அடிமட்ட தொண்டனை ஏமாற்றினாள்.அப்போலோ ரெட்டி அம்மா உடல் நலம் தேறி விட்டார் , எப்போது வெளியில் செல்வது என்பதை அவரே தீர்மானிக்கனும் என்று ஒரு படி மேல் போய் மக்களை ஏமாற்றினான். அம்மாவை கொலை செய்து விட்டனர் மாபியா கும்பல் என்பதை மக்கள் உணர்ந்து இந்த கொள்ளை கூட்டம், கொலைகாரர் கூட்டத்தை ஆட்ச்சியை கைப்பற்ற விடாமல் ஓட ஓட அடித்து துரத்தணும். மக்கள் அபிமானம் பெற்ற முதல்வருக்கு இந்த கதி என்றால் அப்பாவி நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு உண்டு?? இந்த கும்பலை அதிமுகவை விட்டு விலக்கணும், இல்லை மக்கள் எல்லோரும் திருவோடு ஏந்தி வாழ முடியாமல் இறக்க வேண்டி வரும். அப்படியான கொடிய, தீய சக்திகள் இவை, நாட்டை சுடுகாடு ஆக்கி சுவாகா செய்து விடும் இந்த கொள்ளை கூட்டம்.

Rate this:
Rangaraj - Coimbatore,இந்தியா
16-டிச-201621:49:10 IST Report Abuse

Rangarajஜெயலலிதவின் மேல் உண்மையில் நன்றியும் விசுவாசமும் கொண்டு கர்நாடக சிறையிலிருந்து மீட்டவர் குமாரசாமி. அவரை தமிழ்நாட்டுக்கு கூட்டி வந்து அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஆக்கிருங்கப்பா no question no argument

Rate this:
Rangaraj - Coimbatore,இந்தியா
16-டிச-201621:34:09 IST Report Abuse

Rangarajஇப்போதான் புரியாது ஏன் பொன்னையன் இப்படி புளுகினார் என்பது அண்ணாதிமுக ஜெயலலிதா என்கிற one women army ஒரு க இந்த மந்திரிகளெல்லாம் ஒப்புக்கு தங்கியிருந்தாங்க இந்த ஒரு கால் ஒடஞ்சபின்னே அண்ணாதிமுக மண்டபத்தே தங்கவோ தூக்கி நிறுத்தவோ முடியல எப்படியும் நாலு வருடத்திற்கும் அண்ணா திமுக காலியாயிரும் அதுக்கு இப்போ இருக்கிற அண்ணாதிமுக தலைவர்களுக்கு மண்டபத்தினை தாங்க தில் இல்லே இருக்கிற நாலுவருடம் ஜாலியா பிரச்சினை இல்லாம இருக்கனும்ம்னா சசி தான் சரியானஆள் தொண்டர்கள் கிடக்குறாங்க புண்ணாக்கு இருக்க விரும்பலே நாம இருக்கற நாலு வருடம் ஜாலியா இருந்து சம்பாதிக்கணுமின்னா சசிகலாவை தான் மண்டபத்தினை தங்கவிட்டுரனும் அப்பதான் நாம

Rate this:
மேலும் 345 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X