புது டில்லி:ரூபாய் நோட்டுகளை மக்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ளாமல் புழக்கத்தில் விட வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி இரவு அறிவித்தார்.
பழைய ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்ய டிசம்பர் 30ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், நாள்தோறும் வங்கிக்கு மக்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மக்கள் தங்களிடமுள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட வேண்டும் என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராம சுப்பிரமணிய காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
புழக்கத்தில் விட வேண்டுகோள்
இதுகுறித்து அவர் கூறுகையில் ''ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. நவம்பர் 10 முதல் டிசம்பர் 10 வரை மக்களுக்கு 4.61 லட்சம் கோடி ரூபாய் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.மேலும், பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூபாய் நோட்டுகளை கையிருப்பில் வைத்திருக்காமல் அவற்றை புழக்கத்தில் விட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE