கோல்கட்டா:பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு எதிராக பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவம் பற்றி மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு எதிராக மனவ் சர்மா என்பவர் மத்திய கோல்கட்டாவில் உள்ள ஜோரசங்கோ தானா காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்தார். உடனே இந்த புகார் கோல்கட்டா நகர கமிஷ்னருக்கு அனுப்பப்பட்டது. அந்த புகாரில், “கடந்த டிசம்பர் 1ம் தேதி இந்திய ராணுவத்தை தாக்கி பேசினார். இந்திய ராணுவத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை அவர் கூறினார்.
உரிய நடவடிக்கை
இந்திய ராணுவம் தன்னுடைய அரசுக்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபடுகிறது என்று குற்றம்சாட்டினார். இது பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டு செல்லும். கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்ட விவகாரத்தில், மோடி அரசு அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். அதனால் மம்தா மீது இந்த புகாரை பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE