லண்டன்:ரூ.500, ரூ.1000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் சர்வதேச வளர்ச்சிதுறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு பிரிட்டன் சர்வதேச வளர்ச்சிதுறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவழியை சேர்ந்தவரான பிரீத்தி பட்டேல் இதுகுறித்து பேசியதாவது:உலகம் முழுவதும் பயங்கரவாதம் , சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு கருப்பு பணம்தான் முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை பிரதமர் மோடி செல்லாது என அறிவித்து இருக்கிறார். இது ஒரு சரியான நடவடிக்கை.
சரியான நடவடிக்கை:
இந்த நடவடிக்கை மூலம் உலகம் முழுவதும் நடைபெறும் சட்ட விரோத செயல்பாடுகள், சட்ட விரோத வர்த்தகங்கள் போன்றவற்றுக்கு மோடி வலுவான எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவருடைய நடவடிக்கை பாராட்டத்தக்கதாகும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE