மக்களின் பிரச்னை 3 வாரங்களுக்குப் பிறகு சீரடையும்:அருண் ஜெட்லி

Added : டிச 14, 2016 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி:ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், இன்னமும் 3 வாரங்களுக்குப் பிறகு சீராகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.இது குறித்து டில்லியில் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால், உலகில் மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடான இந்தியாவை
 மக்களின் பிரச்னை 3 வாரங்களுக்குப் பிறகு  சீரடையும்:அருண் ஜெட்லி

புதுடில்லி:ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், இன்னமும் 3 வாரங்களுக்குப் பிறகு சீராகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இது குறித்து டில்லியில் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால், உலகில் மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடான இந்தியாவை ரொக்க பரிவர்த்தனை இல்லாத நாடாக மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். மின்னணு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதால், அரசுக்கு வரி வருவாய் கிடைப்பதுடன், முறைகேடுகளும் தடுக்கப்படும்.


துரிதகதியில் நடவடிக்கை



ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு துரித கதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக புதிய ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டு,
இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மக்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள் அனைத்தும் தாற்காலிகமானதுதான். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டுள்ளது.ரிசர்வ் வங்கி நாள்தோறும் மிகப்பெரிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு அனுப்பி வருகிறது. அடுத்த 3 வாரத்துக்குள் குறிப்பிடத்தக்க தொகை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு விடும். அதன்பிறகு, மக்களின் பிரச்னைகள் குறையத் தொடங்கும்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
14-டிச-201618:40:06 IST Report Abuse
Unmai vilambi இவரு மூணுவாரம் என்கிறார் அவர் எப்போதும் 50 நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்.
Rate this:
Cancel
s.f.edison - chennai,இந்தியா
14-டிச-201618:24:07 IST Report Abuse
s.f.edison இனிமேல் எத்தனை நாட்கள் ஆனால் என்ன கஷ்டப்படப்போவது நாங்கள் தானே. கிராமத்தில் பேங்க் இல்லாத கிராமங்களில் வசிக்கும் கிராமத்தான் பணம் இல்லாமல் படும் கஷ்டம் உங்களுக்கு புரிகிறதா என்றே தெரியவில்லை.
Rate this:
Cancel
desadasan - mumbai,இந்தியா
14-டிச-201614:53:22 IST Report Abuse
desadasan அருமையா செஞ்சுட்டீங்க அய்யா.. ஏழை பணக்காரன் னு வித்தியாசம் பாக்காம எல்லாரையும் ஓட்டாண்டியாக்கிட்டீங்களேயா ஒரே ஸ்ட்ரோக்கிலே.. மூணு வாரம் என்ன முப்பது வாரம்னாலும் நாங்க என்னய்யா செய்ய முடியும்.. சொல்லுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X