சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி ஆசையே அதன் மோசமான நிலையை காட்டுகிறது:மாயாவதி

Updated : டிச 14, 2016 | Added : டிச 14, 2016 | கருத்துகள் (6)
Share
Advertisement
லக்னோ:உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட சமாஜ்வாதி கட்சி விரும்புவது, அதன் மோசமான நிலையை வெளிப்படுத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்கவுள்ளது.ஆட்சியைப் பிடிப்பதற்காக மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ், பாஜக, காங்கிரஸ்
சமாஜ்வாதி கட்சி,  கூட்டணி ஆசை, மாயாவதி

லக்னோ:உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட சமாஜ்வாதி கட்சி விரும்புவது, அதன் மோசமான நிலையை வெளிப்படுத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்கவுள்ளது.ஆட்சியைப் பிடிப்பதற்காக மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ், பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தற்போதைய ஆட்சியைத் தக்க வைத்து வரலாற்றுச் சாதனை படைக்க முயலும் முதல்வர் அகிலேஷ் யாதவ், கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க தயார் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


மோசமான நிலை



இதுகுறித்து மாயாவதி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2012இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று ஆட்சியைப் பிடித்த சமாஜ்வாதி கட்சி, தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட விரும்புகிறது.இதனால் மாநிலத்தில் அக்கட்சியின் நிலை மோசமடைந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓட்டுக்கள் பா.ஜ.க.,வுக்கு சென்றடைந்தது. சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலால் அகிலேஷ் யாதவ் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அக்கட்சியில் தற்போது நிலவும் குடும்பப் பிரச்னை ஓய்வதற்கு நீண்ட நாள்கள் ஆகும் என்று தெரிகிறது.என்று அந்த அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
14-டிச-201616:13:53 IST Report Abuse
Chandramoulli கடுமையான போட்டி இருக்கும். தேர்தல் முடிவுக்கு பிறகு எதாவது ஒரு கூடாரம் இட பெயர்ச்சி இருக்கும்.
Rate this:
Cancel
sivaram - singapore,சிங்கப்பூர்
14-டிச-201615:53:18 IST Report Abuse
sivaram சமாஜ்வாதியை விட மோசமானவர் இந்த மாயா. மக்கள் பாஜகவை தேர்ந்தெடுக்கலாம்
Rate this:
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-டிச-201614:01:13 IST Report Abuse
Nallavan Nallavan "அம்முணி காங்கிரசுக்கு விண்ணப்பம் செய்வதாக இருந்தார், ஆனால் சமாஜ்வாதி முந்திக்கொண்டது" என்று பொருள் காண்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X