'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் அதன் மூலம் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு, குலுக்கலில், ஒரு கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவிக்கின்ற னர். வங்கிகளிலும், ஏ.டிஎம்.,களிலும், மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர்.
இதனால், 'ரொக்கமில்லாமல், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு முறையில், பரிவர்த் தனை செய்ய வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதை ஊக்குவிக்கும் வகையில், ஏற்கனவே, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, குலுக்கல் மூலம் பரிசுகள்
வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, 'நிடி ஆயோக்' தலைமை செயல்அதிகாரி, அமிதாப் காந்த் கூறியதாவது: டிஜிட் டல் பரிவர்த்தனைக்கு
மக்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது; இதை, மேலும் ஊக்குவிக் கும் வகையில்,
குலுக்கல் முறை யில் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளோம். பொது மக்கள் மற்றும்
வர்த்தகர்களுக்கு தனித்தனியாக பரிசு கள் வழங்கப்படும். மொத்தம், 340 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்.
கிறிஸ்துமஸ் தினமான, டிசம்பர், 25ல் இருந்து, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 50 முதல், 3,000 ரூபாய்க்குள் டிஜிட்டல் பரிமாற்றம் செய்பவர் கள், குலுக்கல் பரிசுக்கு தகுதியுடையவர்கள்; இதன்படி, தலா, 1,000 ரூபாய் பரிசு, 15 ஆயிரம் பேருக்கு, 100 நாட்களுக்கு வழங்கப்படும்.
இதைத் தவிர, வாரம் தோறும், 7,000 பரிசுகளும் வழங்கப்படும். அது போலவே, டிஜிட்டல் பரி வர்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ள வர்த்தகர் களுக்கும் பரிசு வழங்கப்படும்; வாரந்தோறும், 7,000 வர்த்தகர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
இதை தவிர, 2016 நவம்பர், 8 முதல், 2017
ஏப்ரல், 13 வரை, டிஜிட்டல் பரிமாற்றம் செய்த பொதுமக்களில், மூன்று பேர் 'மெகா' பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் படுவர்.அவர்களில், முதல் பரிசு பெற்றவருக்கு, ஒரு கோடி ரூபாயும்; இரண்டா வது பரிசு பெற்றவருக்கு, 50 லட்சம் ரூபாயும்; மூன்றாவது பரிசு பெற்றவருக்கு, 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினமான, ஏப்ரல், 14ல், பரிசு பெறும் நபர்கள் பற்றிய அறி விப்பு வெளியாகும். இந்த பிரிவில், வர்த்தகர் களுக்கு, 50 லட்சம், 25 லட்சம், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று மெகா பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்கெல்லாம் பரிசு
மத்திய அரசு அறிவித்துள்ள குலுக்கல் பரிசு திட்டம், தனியார், 'கிரெடிட் கார்டு' மற்றும் தனியார் நிறுவனங்களின், 'இ - வாலட்' மூலம் பணம் செலுத்துவோருக்கு பொருந்தாது. அதே நேரத்தில், யு.பி.ஐ., மற்றும் யு.எஸ்.எஸ்.டி., பரிவர்த்தனைகள், 'ரூபே' கார்டு ஆகியவற்றை பயன் படுத்துவோர், பரிசு பெற தகுதி உடையவர்கள்.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (83)
Reply
Reply
Reply