சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது

Added : டிச 16, 2016 | கருத்துகள் (2)
Advertisement

பாலக்கோடு: மாணவிகளை பாலியல் பாலத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், மேலும், இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, ஒருவரை தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார், 27. இவர், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில், தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தியதோடு, குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார். இங்கு படிக்கும் மாணவிகளிடம், சிவக்குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இவரது ஆசை வார்த்தையில் மயங்கிய ஒரு சில மாணவிகளை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார். மேலும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார். இதுகுறித்து, 17 வயது மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் படி, பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார். மேலும், அவரிடம் இருந்து, மாணவிகளின் ஆபாச படம் இருந்த மொபைல்போனையும் பறிமுதல் செய்தார். விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் வீடியோக்களை, டியூசன் சென்டரில் பணியாற்றும், தன் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மற்றொரு நண்பருக்கு, சிவக்குமார் காட்டியுள்ளார். இதையடுத்து, நான்கு பேரும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈஸ்வரன், 26, மற்றொரு சிவக்குமார், 27, ஆகியோரை போலீசார் கைது செய்து, பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சி அடங்கிய மொபைல்போன்களை, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதால், இங்கு படித்த மாணவிகள் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரும் பீதியடைந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-டிச-201615:35:33 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒரு மாணவிக்கு இவர்கள் தொல்லை கொடுக்கும் போதே அவர் தன் பெற்றோருடன் சொல்லியிருந்தால் இந்த விஷயம் அதோடு முடிந்திருக்கும் இத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். பாரதி கண்ட புதுமை பெண்ணாக நிமிர்ந்து நில்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
16-டிச-201615:19:57 IST Report Abuse
ganapati sb கொடுமையான விஷயம். ஆசிரியர் தொழிலும் மருத்துவர்கள் தொழிலும் தான் மக்கள் மரியாதையை கொடுக்கும் தொழிலாகும். அவர்களை நம்பி தன குழந்தைகளையும் தன்னையும் அவர்களிடம் ஒப்படைப்பார்கள். இந்த இரு தொழிலும் தவறு செய்பவது தகுந்த ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டால் , மரண தண்டனை கூட தரலாம் . இவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை தரப்படவேண்டும் . அப்போதுதான் அந்த சேவை நோக்கம் கொண்ட தொழிலின் மரியாதையை காப்பாற்றப்படும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X