பொது செய்தி

தமிழ்நாடு

கேபிள் டி.வி., ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்க கூட்டம்

Added : டிச 17, 2016
Advertisement

உளுந்துார்பேட்டை: டிஜிட்டல் ஒளிபரப்பை உளுந்துார்பேட்டைக்கு கொண்டு வருவது என தமிழக கேபிள் டி.வி., ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.உளுந்துார்பேட்டையில், தமிழக கேபிள் டி.வி., ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஏ.ஜே., திருமண மண்டபத்தில் நடந்தது.கூட்டத்திற்கு வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தியாகராஜன், மாநில தலைவர் ஆறுமுகம், மாநில துணை தலைவர் விஷ்ணுராம், மாவட்ட செயலாளர் பிரகதீஸ்வரன், மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன், மாநில துணை செயலாளர் கந்தன், உளுந்துார்பேட்டை செயலாளர் அன்பழகன், பொருளாளர் கேசவன், மோகன்ராஜ், தண்டபாணி, ஜானிபாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கேபிள் டி.வி.,யின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு அனைவரும் தயாராக வேண்டும், சென்னையில் துவங்கப்பட்ட டிசிசிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பை உளுந்துார்பேட்டைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக ஊர்வலமாக வந்த நிர்வாகிகள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X