பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'வனத்துக்குள் திருப்பூர் -2' திட்டம் நிறைவு!
* 'டாலர் சிட்டி'யில் பசுமை புரட்சி

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் --2' திட்டம் நிறைவு விழா நேற்று நடந்தது.

 ---'வனத்துக்குள் திருப்பூர் --2' திட்டம் நிறைவு! * 'டாலர் சிட்டி'யில் பசுமை புரட்சி

திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், மரக்கன்றுகளை நட்டு, இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து பராமரிக்கும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், திருப்பூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'வெற்றி' அமைப்பின் இம்முயற்சியில், 'தினமலர்' நாளிதழும் கரம்கோர்த்துள்ளது.

கடந்தாண்டு, 1.35 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இவை, தொழில் நிறுவனங்கள் வழங்கிய, 30 டிராக்டர்கள் மூலம், நீர் விட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்தாண்டு, இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

நிர்ணயிக்கப்பட்டு, கடந்த ஜூலையில் பணி துவங்கியது. இலக்கையும் தாண்டி, 2.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதற்கான, நிறைவு விழா, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது.

ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவத் தலைவர் சக்தி வேல் தலைமை வகித்து பேசுகையில், ''திருப் பூரில், விறகு கொண்டு எரிக்கும் பாய்லர்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, இனி, ஆர்டர் தர முடியாது. இயற்கையை காப்பாற்றும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும்,'' என்றார்.

முன்னதாக விழாவுக்கு, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், 'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். திட்டம் குறித்து, 'வெற்றி' அமைப்பு தலைவர் சிவராம் விளக்கினார்.

'தினமலர்' நாளிதழ், நிர்வாக இணை இயக்குனர் (விற்பனை) ஸ்ரீனிவாசன், பசுமைக் கொடையாளர்கள், மரக்கன்று நடவு செய்த விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர். 'வனத்துக்குள்

Advertisement

திருப்பூர்' திட்டத்தை சிறப்பிக்கும் வகையில், தபால்தலை வெளியிடப்பட்டது. அரிய வகை மரங்களை பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை நிர்வாகக் குழு உறுப்பினர் கார்த்திகேய சிவசேனாபதி, சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம், 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், 'ஓசை' காளிதாஸ், 'வனம் இந்தியா' சுந்தரராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vincent Jayaraj - salem,இந்தியா
18-டிச-201618:26:20 IST Report Abuse

Vincent Jayarajவாழ்த்துக்கள், வனத்துக்குள் திருப்பூர் -2' திட்டம் நிறைவு எல்லைகள் விரிந்து ," வனத்துக்குள் தமிழகம்" என்ற உன்னத நிலை ஏற்பட வேண்டும்.

Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
18-டிச-201620:54:18 IST Report Abuse

Rangiem N Annamalaiநாங்களும் அதற்காக காத்திருக்கிறோம் . ...

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
18-டிச-201613:30:08 IST Report Abuse

Chandramoulliஇந்த திட்டம் கோவை சுற்றுப்புறங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . தொடரட்டும் உங்களின் சேவை . வாழ்த்துக்கள்.

Rate this:
திருஞானம் - Sarakkalvilai,இந்தியா
18-டிச-201610:17:38 IST Report Abuse

திருஞானம்மரம் நாடுவோரும் அதை பேணிக் காப்போரும் உலகத்தில் உயர்ந்தவர்கள்.. 'வெற்றி' அமைப்பின் பசுமைத் தொண்டு ஓங்குக...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X