டேராடூன்:அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்பவர்களுக்கு புது விதமான நிபந்தனை களை விதித்துள்ளது உத்தரகண்ட் மாநில, காங்கிரஸ்.
முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வினோதமான நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி விதித்துள்ளது.
'சீட் கேட்பவர்கள், ஐந்து கி.மீ., துாரத்துக்கு நடக்க வேண்டும்; அந்தத் தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேச வேண்டும். அதைத் தவிர, தொகுதியில் விரும்பிய ஒருவர்
வீட்டில், ஒரு இரவு தங்கியிருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் வெற்றி
பெறுபவர்களுக்கு மட்டுமே சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும்' என, மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் தலை வர் கிஷோர் உபாத்யாயா கூறியதாவது:
விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், நடை பயணத்தை மேற்கொண்டு, மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.அதே வழியில், கட்சியிலும் மக்களிடையேயும் நெருக்க மாக உள்ளவருக்கு சீட்வழங்கவே, ஐந்து, கி.மீ., நடை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப்
பயணத்தின்போது, தொகுதியில் தங்களுக்கு விருப்பமான, ஏதாவது ஒரு வீட்டில்,
ஒரு இரவு தங்கியிருக்க வேண்டும். இதன் மூலம், தேர்தல்
பிரசாரத்தின்போது, அவர்கள் சிறப்பாக செயல் படுவதற்கு வாய்ப் பாக இருக்கும். ஹரித்துவா ரில், 19ல் துவங்கும் இந்த நடை பயண போட்டி, 70 தொகுதிகளிலும் நடத்தப்படும்.
இந்த போட்டியை அந்தந்த பகுதி, கட்சி நிர்வாகி கள் கண்காணிப்பர். இந்தப் போட்டி அனைவருக் கும் பொருந்தும். உடல்நலக் குறைவு அல்லது நடக்க முடியாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (15)
Reply
Reply
Reply