தேனி;''கறுப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்தை சாமானிய மக்கள் சுகமான சுமையாக கருதுகின்றனர்,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த தைப்பொங்கலை ஜல்லிக்கட்டோடு நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நவ.8ல் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை பல்வேறு
சிரமங்களை சாமானிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதை இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் அந்த சுமையை சுகமான சுமையாக கருதுகின்றனர்.
நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு ,பண முதலாளிகள் அவர்கள் தன்மையில் இருந்து மாறவேண்டும். இதற்கு இதுபோன்ற நடவடிக்கை தேவையாக உள்ளது. இதை மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர். சென்னையை தாக்கிய 'வர்தா' புயல் பாதிப்பிற்கு என்ன உதவி தேவையோ அதை பிரதமர் மோடி செய்வார், என்றார்.