அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணம் குறித்த வெள்ளை அறிக்கை சர்ச்சை : திருநாவுக்கரசர் - இளங்கோவன் மோதல்

Updated : டிச 20, 2016 | Added : டிச 19, 2016 | கருத்துகள் (22)
Share
Advertisement
ஜெயலலிதா மரணம் தொடர்பான வெள்ளை அறிக்கை விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 'ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தினார். கூட்டணி கட்சியான காங்கிரசும், இதை ஆதரிக்கும் என, தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், 'வெள்ளை அறிக்கையோ,
ஜெ., மரணம் குறித்த வெள்ளை அறிக்கை சர்ச்சை : திருநாவுக்கரசர் - இளங்கோவன் மோதல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான வெள்ளை அறிக்கை விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 'ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தினார். கூட்டணி கட்சியான காங்கிரசும், இதை ஆதரிக்கும் என, தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், 'வெள்ளை அறிக்கையோ, கறுப்பு அறிக்கையோ தேவையில்லை; அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்துவிட போகிறாரா' என, திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த, தி.மு.க.,வினர், சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம் இதுபற்றி முறையிட்டுள்ளனர். காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்த பின், ராகுலுடன் தனி அறையில், தி.மு.க.,வினர் பேசினர். அப்போது, 'நாங்கள், உங்களை அடுத்த பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்; ஆனால், திருநாவுக்கரசரோ, சசிகலாவை முதல்வராக்குவதில் தான் விருப்பம் காட்டி வருகிறார்' என, கூறியுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திருநாவுக்கரசர், 'ராஜிவ் மரணத்துடன் ஜெயலலிதா மரணத்தை தொடர்புபடுத்தி பேசக் கூடாது. அப்படி பேசுவோர், மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தான் இருப்பார்' என, இளங்கோவனை சாடினார்.
இதனால், கடுப்பான இளங்கோவன், நேற்று திருநாவுக்கரசருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட அறிக்கை: என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என, சாடியிருக்கிறார்; அவர் மனநிலை பாதிக்கப்படாமல் திடமான மனதோடு இருப்பது சரியானால், ஏன் எல்லா இடங்களிலும், அ.தி.மு.க.,வில் இருந்திருந்தால், முதல்வராக இருந்திருப்பேன் எனக்கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, அ.தி.மு.க.,வில் இருந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என சிந்திப்பது தான், திடமான மனநிலையா; வெள்ளை அறிக்கை வேண்டாம் என்ற கருத்து, அவரது சொந்த கருத்தல்ல; காங்கிரஸ் கருத்து என்றால் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி முடிவெடுத்தாரா? இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுபற்றி, திருநாவுக்கரசர் கூறுகையில், ''இளங்கோவன், தினமும் வெளியிடுகிற அறிக்கைக்கு, நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நான் தெரிவித்த கருத்து தவறா என்பதை, மேலிட தலைவர்கள் முடிவு செய்ய வேண்டுமே தவிர, வேறு யாருக்கும் அந்த உரிமையில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-டிச-201617:44:34 IST Report Abuse
Nallavan Nallavan நாவுக்கரசர் பையன் குடிபோதையில் தகராறு செஞ்சதா ந்யூஸ் வருதே ..... அதுக்கு ஒரு வெள்ளை அறிக்கை கொடுப்பாரா நாவு ????
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-டிச-201617:06:54 IST Report Abuse
Cheran Perumal இந்த இருவருக்கும் தலைவர் பதவி கொடுக்கிற அளவிற்கு காங்கிரஸ் தாழ்ந்து போயுள்ளது.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
20-டிச-201615:07:54 IST Report Abuse
Tamilnesan ஒழுங்கான ஆம்பிளயாக இருந்தால் இளங்கோவன் தனியாக எந்த கூட்டணியுமின்றி தேர்தலில் ஜெயிக்க வேண்டியது தானே ? கூஜா தூக்கி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இன்னும் உள்ளது என்பதற்கு இருவர் ஆடும் நாடகமே இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X