தூங்காம சுத்துதாம் ஆவி; வாங்க ஆளில்லாம கிடக்குதாம் சாவி!

Added : டிச 20, 2016
Share
Advertisement
""அரசியல் கட்சி என்றாலே பிரச்னை தான்; அதிலும், ஆளுங்கட்சி என்றால் கூடுதல் பிரச்னை,'' என்றபடியே வண்டியை நிறுத்தி விட்டு, வந்து அமர்ந்தாள் சித்ரா.""வரும் போதே அரசியலா? எந்த கட்சிக்கு, என்ன பிரச்னை?'' என்று, மித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.""இது, லோக்கல் மேட்டர், மாவட்ட மாஜி பேர்ல, வாட்ஸ் ஆப்பில் தகவல் வந்தது பத்தினது,'' என்றாள் சித்ரா.""ஆமா. ஏற்னவே, பண மோசடி புகார்
தூங்காம சுத்துதாம் ஆவி; வாங்க ஆளில்லாம கிடக்குதாம் சாவி!

""அரசியல் கட்சி என்றாலே பிரச்னை தான்; அதிலும், ஆளுங்கட்சி என்றால் கூடுதல் பிரச்னை,'' என்றபடியே வண்டியை நிறுத்தி விட்டு, வந்து அமர்ந்தாள் சித்ரா.
""வரும் போதே அரசியலா? எந்த கட்சிக்கு, என்ன பிரச்னை?'' என்று, மித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""இது, லோக்கல் மேட்டர், மாவட்ட மாஜி பேர்ல, வாட்ஸ் ஆப்பில் தகவல் வந்தது பத்தினது,'' என்றாள் சித்ரா.
""ஆமா. ஏற்னவே, பண மோசடி புகார் சொன்ன பெண்தான், இதற்கு காரணமுன்னு, "மாஜி' புகார் கொடுத்து, போலீசாரும் வழக்கு பதிவு செஞ்சுட்டாங்களே,'' என்றாள் மித்ரா.
""இந்த பிரச்னை தொடர்பா, பேஸ்புக்கில், தி.மு.க.வை சேர்ந்த ஒருத்தர் விமர்சனம் செஞ்சிருக்கார்.
அதனால, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு ஆவேசம் வந்திருச்சு. கட்சிக்காரர்கள் சிலர், அவர் வீட்டுக்கே போய், அந்த பதிவை நீக்கணும்; அதற்கு விளக்கம் தந்து, ஒரு பதிவு போடணும் கேட்டிருக்காங்க. உடனே அந்த நபர், தி.மு.க., மாவட்ட அலுவலகத்துக்கு போய், தன் கட்சிக்காரங்ககிட்ட, இது பத்தி சொல்லியிருக்கார். அவங்க ஆலோசனைப்படி, போலீசுக்கு புகார் கொடுக்க போயிருக்கிறார். ரெண்டு தரப்பிலும், கட்சிக்காரங்க ஸ்டேஷனில் திரண்டு நின்னதால, பரபரப்பாயிடுச்சு. ஒருவழியா, போலீஸ்காரங்க சமரசம் செஞ்சு அனுப்பினாங்க,''என்று, சித்ரா விவரித்தாள்.
""தாராபுரத்தில் நடந்த ஒரு சம்பவம் தெரியுமா'' என்றாள் மித்ரா.
""அங்கு என்னாச்சு,'' என்று, ஆர்வம் பொங்க சித்ரா கேட்டாள்.
""மூலனூர் பக்கம், ஒரு ஆயில் மில்லில் இருந்து கழிவு வெளி வர்றதை கண்டிச்சு, பொதுமக்கள் உண்ணாவிரதம் நடத்தினாங்க. போராட்டத்துக்கு அனுமதி தந்த போலீஸ், மைக்செட்டு வைக்க, தடை போட்டுட்டாங்க.
இது தொடர்பா, டி.எஸ்.பி., கிட்ட, கேட்டிருக்காங்க. அதற்கு அந்த மேடமோ, இடுப்பில் கை வெச்சுகிட்டு, உண்ணாவிரதத்துக்கு அனுமதி கொடுக்கறதே பெரிசு. இதிலே, மைக்செட் வேற கேட்குதா? என்று பேசினாராம். போராட்டம் நடத்தினவங்கிட்ட வாக்குவாதம் செஞ்சு, ஜீப்பில் ஏறி போய்ட்டாராம் அந்த பெண் அதிகாரி,'' என்று சொல்லிக்கொண்டிருந்த போதே, அங்கு வந்த பெண்ணைப்பார்த்து, ""ஜெரீனா பேகம் அக்கா, நல்லாருக்கீங்களா? அண்ணன் வரலியா,'' என்று நலம் விசாரித்தாள் மித்ரா. அவரும், பதில் கூறி விட்டு நகர்ந்தார்.
""பொதுமக்கள் அதிருப்தியை சம்பாதிச்ச போலீஸ் பெண் அதிகாரி மாதிரியே, வாடிக்கையாளர்களிடம் வாங்கி கட்டிகிட்ட வங்கி அதிகாரி கதை தெரியுமா,'' என்றாள் சித்ரா.
""அப்படியா? அந்த கூத்து எங்க நடந்தது,'' என்று கேட்டாள் மித்ரா.
""தாராபுரம் பக்கம், கனரா பேங்கிலே, வாடிக்கையாளர் கூட்டம் ரொம்ப நேரம், நகராம இருந்திருக்கு. கேட்டா, கரண்ட் இல்ல; யு.பி.எஸ்., வேலை செய்யலைன்னு, சொல்லியிருக்காங்க. மின் விசிறி எல்லாம் ஓடுது; கம்ப்யூட்டருக்கு மட்டும் கரன்ட் இல்லையான்னு, வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்ய, கிளை மேலாளர், கேபினுக்குள் போய் உட்கார்ந்துட்டாரம். மத்த அலுவலர்களும், எரிஞ்” விழுந்துகிட்டே இருக்கறதா, வாடிக்கையாளர்கள் புலம்பறாங்க,'' என்று சித்ரா சொன்னாள்.
""வங்கி அலுவலர்களும் பாவம், ரொம்பவே கஷ்டப்படறாங்க. ஆனாலும், வரிசையில் நிக்கிற வாடிக்கையாளர்களோட நிலைமையை நினைச்சு பார்த்து, கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சு போகணும். அதுபோகட்டும். திருப்பூர்ல, பாட்டிங்களுக்கு "மவுசு' அதிகமாயிருச்சு,'' என்றாள் மித்ரா.
""அப்படியா? என்ன விஷயம்?''என்று, சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""பேங்க் ஏ.டி.எம்., வாசலில், பணம் எடுக்க, பலரும் வரிசையில் நிக்கறாங்க. போலீஸ் பாதுகாப்போட வரிசையில் நின்று, பணம் எடுத்துட்டு போறாங்க. ஈஸ்வரன் கோவில் பக்கம் இருக்கற ஒரு ஏ.டி.எம்.,ல, பாட்டிங்க போயி, "நிக்க முடியாது சாமீ.பணம் எடுத்து கொடுங்க'னு கேட்டிருக்காங்க.
அவங்க பணம் எடுத்து வந்ததுமே, ரோட்டோரம், 100 மீட்டர் தொலைவிலே, "டூ விலர்'ல காத்திருந்த, இளைஞர் ஒருவர், வேகமாக வந்து, பாட்டி கையில இருந்த ஏ.டி.எம்., கார்டையும், பணம், 2,000 ரூபாயையும் வாங்கிட்டு, பாட்டி கையில், 20 ரூபாய் திணிச்சுட்டு வேகமாக போயிட்டாரு.. அதனால, பணமெடுக்க, பாட்டிங்களை அனுப்பறது அதிகமாயிடுச்சு,''என்றாள் மித்ரா.
""அடப்பாவமே. பஸ் ஸ்டாண்ட் விஷயத்துல நடந்த மாதிரி, ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க போல,'' என்று சித்ரா கூறினாள்.
""பஸ் ஸ்டாண்டா? அங்க என்ன விவகாரம்,'' என்று ஆச்சரியத்தோடு, மித்ரா கேட்டாள்.
""மாஜி' அமைச்சரா இருந்தப்ப, பாலம் வேலைக்காக, கோவில்வழியில பஸ் ஸ்டாண்ட் அமைக்கணுமுன்னு, தீவிரமா இருந்தாரு. இப்ப, மாநகராட்சி நிர்வாகமும், கோவில்வழியில தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க, ஸ்டெப் எடுத்தாங்க. ஆனா, பெரும்புள்ளிங்க சிலர் குறுக்கே போய், பஸ் ஸ்டாண்ட் மாற்றும் முடிவை கைவிடணும்னு தடுத்திட்டாங்க,''
""உயர்மட்ட பாலம் வந்த பிறகு, "சரியா வியாபாரம் இல்லை'னு, ஏற்கனவே வியாபாரிங்க புகார் சொல்லியிருக்காங்க. கோவில்வழியில பஸ் ஸ்டாண்ட் வந்தா, பழைய பஸ் ஸ்டாண்ட் காலியாகிடும்னு, வியாபாரிங்களும், பெரிய நிறுவனங்களும் கவலைப்படறாங்க. அதனால, முக்கிய வி.ஐ.பி.,யை சந்திச்சு, பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை நிறுத்தணும்னு பேசியிருக்காங்க. விஷயம் தெரிந்த எதிர்க்கட்சிக்காரங்க, பஸ் ஸ்டாண்ட் கட்டியே தீரனும்னு, ஒத்த காலில் நின்று, அரசுக்கு "பெட்டிஷன்' போட ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""குவாட்டர்ஸ்ல' ஆவி நடமாட்டம் இருக்குதுனு அதிகாரிங்க பீதியில் இருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.
""அப்படித்தான் சிலர் பேசிகிட்டாங்க. கலெக்டர் ஆபீசுக்கு பின்னாடி, அதிகாரிங்களுக்காக, 24 வீடு கட்டியிருக்காங்க. ஆள்நடமாட்டம் இல்லாத அந்த கட்டடத்துல, திடீர் திடீர்ன சத்தம் வருதாம். அதனால, "ஆவி' நடமாடுதோன்னு பயப்படறாங்க. திருப்பூர்ல வீடு கிடைக்காம மக்கள் அல்லாடற நேரத்துல, கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில், பாதி வீடுங்க, பூட்டியே வச்சிருக்காங்க. சாவி வாங்க கூட அதிகாரிங்க தயாராக இல்லையாம். இந்த காலத்திலேயும் "ஆவி'ன்னு சொல்லிட்டு பயப்படறது அதிசயமாக இருக்குது,'' என்றாள் சித்ரா.
""ஜெ.,வுக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்திட்டாங்க. ஆனா, "மாஜி' மேயர் எங்க போனாங்கனே தெரியலை,'' என்றாள் மித்ரா.
""மேயர் பதவிய அனுபவிச்சாங்களே; அந்த நன்றிக்கடனுக்காக கூடவா, அஞ்சலி செலுத்த வரலை?''என்று, சித்ரா ஆச்சரியத்தோடு கேட்டாள்.
""சென்னையில் நடந்த நிகழ்ச்சியிலும் சரி, மாவட்டத்தில நடந்த அ.தி.மு.க., அஞ்சலி கூட்டத்திலும் சரி, "மாஜி' மேயரை பார்க்கவே முடியல. பதவியில இருக்கும் போது, அரசு விழாவில கலந்துக்க மாட்டாங்க சரி; பதவி இல்லாதபோது கூடவா, ஜெ., அஞ்சலி கூட்டத்துக்கு வராம இருக்கணும்னு, கட்சி தொண்டர்களும், கவுன்சிலர்களும் சாபம் விடாத குறையா கரிச்சு கொட்டிட்டு இருக்காங்க'' என்றாள் மித்ரா.
அப்போது, சித்ராவின் மொபைல் போன், ஒலித்தது. போனில் பேசிய படியே, ""ஓ.கே., மித்ரா, பக்கத்து வீட்டு, ஜெனிபர் ஆன்ட்டி, கிறிஸ்துமஸ் டிரெஸ் செலக்ட் பண்ண கூப்பிடாங்க. நான் கடை வீதி போயிட்டு வந்துடறேன்,'' என்றவாறே, ஸ்கூட்டியில் பறந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X