ரூ.10 நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Added : டிச 21, 2016 | கருத்துகள் (7) | |
Advertisement
தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.சுற்றறிக்கை :இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 10 ரூபாய் நாணயத்தின் வடிவம், எடை, டிசைன், எந்த ஆண்டில், யார் நினைவாக அச்சடிக்கப்பட்டது போன்ற விபரங்களை
ரூ.10 நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.


சுற்றறிக்கை :

இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 10 ரூபாய் நாணயத்தின் வடிவம், எடை, டிசைன், எந்த ஆண்டில், யார் நினைவாக அச்சடிக்கப்பட்டது போன்ற விபரங்களை அளித்து, வங்கிகள், தங்கள் பகுதி வணிக நிறுவனங்களில் விழிப்புணர்வு நோட்டீசாக ஒட்ட உத்தரவிட்டுள்ளது. மேலும், 2010ல் தான், 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது எனவும், அதன்பின், தலைவர்களின் நினைவாக, அடுத்தடுத்த ஆண்டுகளில், நாணயம் அச்சடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.


செல்லும் :

கடைசியாக, ஜூன், 22ல், சுவாமி சின்மயானந்தா நுாற்றாண்டு விழா நினைவாக, 10 ரூபாய் நாணயம் அச்சடிக்கப்பட்டு உள்ளது. எனவே, தயக்கமின்றி, 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது. மேலும், சில்லரை தட்டுப்பாட்டை போக்க, பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு, 10 ரூபாய் நாணயங்கள், 15 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
21-டிச-201611:42:29 IST Report Abuse
Ramesh Kumar எனக்கு தெரிந்து ரிசர்வ் வங்கி பிரதமரின் கைப்பாவையாக மாட்டிக்கொண்டு விழிப்பது இதுவே முதல் முறை......மத்திய ரிசர்வ் வங்கி ஒரு தன்னாட்சி நிறுவனம்...ஆனால் மோடி தனது விளம்பர மோகத்துக்காக ரிசர்வ் வங்கியை ஆட்டி படைக்கிறார்.....வரா கடன் சுமையில் சிக்கியுள்ள பல வங்கிகள் குவிந்து வரும் செல்லாத நோட்டு டெபாசிட்டுகளால் இன்னமும் ஆறு மாதத்தில் பேய் முழி முழிக்கப்போகின்றன. ஒரு வங்கியின் மொத்த டெபாசிட் அளவில் .80 சத அளவில் வெளியே கடனாக கொடுத்தால் தான் வரும் வட்டியை வைத்து டொப்பாசிட் தாரர்களுக்கு வட்டியும் இதர நிர்வாக செலவுகளையும் பார்க்க முடியும்...இப்போது பணம் வெளியே போவதே இல்லை....வட்டி சுமை தான் கூடும்....அப்படி வெளியே கொடுத்தால் யாருக்கு கொடுக்க போகிறார்கள்......ஏழை நடுத்தர மக்களிடம் பிடுங்கிய பணத்தை பெரும் பண முதலைகளுக்கு வாரி கொடுக்கவே இந்த ஏற்பாடு என்று சந்தேகிக்க தோன்றுகிறது.....
Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
21-டிச-201613:33:50 IST Report Abuse
ganeshaரமேசு, எந்த விஷயத்தையும் புரிஞ்சுண்டு பேச தெரியாதா. ஏழை மக்களின் பணத்தை புடுங்கி பணக்காரகர்களுக்கு யார் கொடுக்கறாங்க. அப்படி என்றல் , உங்கள் பணம் எவ்வளவு எடுத்து பணக்காரர்களிடத்தில் கொடுத்து இருக்காங்க ன்னு பாருங்க, உங்க பணம் உங்க அக்கௌன்ட் இல் தான் இருக்கு. அதே போல எல்லார் பணமும் அவர் அவர் கணக்குகளில் தான் இருக்கு. முதல்ல அதை தெரிஞ்சிக்கோங்க. மேலும் காங்கிரஸ் கட்சி தான் அறுபது வருடம் ஆட்சி நடந்திருக்கு. இந்த அறுபது வருடத்தில் தான் மல்லையா அதானி ரிலையன்ஸ் போன்ற வர்களுக்கு வங்கியில் பணம் கொடுக்க பட்டிருக்கு. இந்த இரண்டு வருடத்தில் மட்டும் அவர்களுக்கு வங்கிகள் பணம் கொடுக்க வில்லை. மேலும். வாரா கணக்கு விதி முறைகளும் காங்கிரஸ் ஆட்சியின் பொது தான் கொண்டு வர பட்டது. இந்த இரண்டு வருடத்தில் இல்லை. அதற்கும் மேலாக காங்கிரஸ் கொண்டு வந்த சட்டப்படி இந்த வாரா கடன்களை தள்ளுபடி செய்வது வங்கிகள் தான். மூன்று மற்றும் ஐந்து வருடமாக வாங்கிய கடனுக்கு பணம் திருப்பி கட்ட வில்லையென்றால் மட்டுமே அந்த கடன்களை வாரா கடன் என்று வங்கிகள் தள்ள்படி செய்ய சட்டம் உள்ளது. இதற்கு மாட்டிய அரசு ஒப்புதல் கூட தேவை இல்லை. இவற்றை தெரிந்து கொள்ளுங்கள். பிறகு பேசுங்கள். யார் பணத்தை எடுகு யாருக்கு கொடுக்கறாங்க. யார் காலத்தில் கொடுக்கப்பட்ட கடன்கள் இப்பொழுது வங்கிகள் தள்ளுபடி செய்கின்றான் என்று. எல்லாத்தும் மோதி மற்றும் பிஜேபி ஐ குற்றம் சொல்லாதீர்கள். கொள்ளை அடித்த காங்கிரஸ் தான் எல்லாவற்றிற்கும் பிரச்னை....
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-டிச-201606:59:35 IST Report Abuse
K.Sugavanam தாங்கள் புழக்கத்தில் விட்ட நாணயம் செல்லும் என அறிவிப்பு விடும் நிலையில் ரிசர்வ் வங்கி...பலே,,பலே..
Rate this:
Cancel
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
21-டிச-201606:58:49 IST Report Abuse
Siva Subramaniam தமிழ் நாட்டில் 50 பைசா நாணயங்களை யாரும் வாங்குவது இல்லை.இது பற்றி பல முறை சம்பந்த பட்ட எல்லவருக்கும் எழுதி எந்த பயனும் இல்லை.இது பற்றி தினமலரில் நான் எழுதி விட்டேன் .யாரவது ஏதாவது செய்யமுடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X