தேவை நிறைய மூர்த்திகள்...

Updated : டிச 21, 2016 | Added : டிச 21, 2016 | கருத்துகள் (5) | |
Advertisement
தேவை நிறைய மூர்த்திகள்...வெளுத்துப்போன லுங்கிகசங்கிப்போன பழைய சட்டைஒரு காலத்தில் வெள்ளை நிறமாக இருந்து தற்போது பழுப்பு நிறத்துக்கு மாறிப்போன தலையில் கட்டிய துண்டுஇதுதான் சென்னை சைதாப்பேட்டை பூங்காவில் தோட்டவேலை செய்யும் மூர்த்தியின் அடையாளங்கள்.புயலால் சென்னையில் உள்ள பல பூங்காக்களின் மரமங்கள் செடிகள் ஒடிந்து மடிந்து பொலிவிழந்து காணப்படும் நிலையில், இந்த
தேவை நிறைய மூர்த்திகள்...

தேவை நிறைய மூர்த்திகள்...


வெளுத்துப்போன லுங்கி

கசங்கிப்போன பழைய சட்டை


ஒரு காலத்தில் வெள்ளை நிறமாக இருந்து தற்போது பழுப்பு நிறத்துக்கு மாறிப்போன தலையில் கட்டிய துண்டு

இதுதான் சென்னை சைதாப்பேட்டை பூங்காவில் தோட்டவேலை செய்யும் மூர்த்தியின் அடையாளங்கள்.


புயலால் சென்னையில் உள்ள பல பூங்காக்களின் மரமங்கள் செடிகள் ஒடிந்து மடிந்து பொலிவிழந்து காணப்படும் நிலையில், இந்த பூங்காவின் மரம் செடிகொடிகள் மட்டும் தப்பிப்பிழைத்து தளதளவென நிமிர்ந்து நிற்கின்றது.

இத்தனைக்கும் காரணம் இந்த ஒற்றை மனிதன் மூர்த்திதான்.


புயல் வந்த நாளுக்கு மறுநாள் முதல் இன்று வரை இவரது பணி மகத்தானது.பெரிய மரங்களின் கிளைகளை ஒடித்துவிட்டு முட்டுக்கொடுத்து மரத்தை கிழே விழாமல் வளரச்செய்வது சிறிய செடிகளை இழுத்துபிடித்து கயிறு கொண்டு கட்டிவைப்பது அவைகளை சீராக்குவது பள்ளத்தை செங்கல் மணல் கொண்டு நிரப்பி பலப்படுத்துவது என்று சுறுசுறுப்பாக இவரது வேலை தொடர்கிறது.

இதன் காரணமாக பூங்காவில் உள்ள தொன்னுாறு சதவீத மரங்கள் செடி கொடிகளை காப்பாற்றி பழைய நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்.ஆளாளுக்கு அந்த செடியப்பாரு இது இழுத்துக்கட்டு என்று ஆலோசனை தந்தார்கள்,யார் யார் சுட்டிக்காட்டுகிறார்களோ அந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து முடித்தார்.


மாதம் ஆறாயிரத்து ஐநுாறு ரூபாய் காண்ட்ராக்ட் சம்பளத்தில் தோட்ட வேலை பார்க்கும் இவருக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வேறு வரவில்லையாம்.காண்ட்ராக்டருக்கு என்ன கஷ்டமோ என்று கவலைப்பட்டவர் அவர் வந்து பணம் தந்தால் இரண்டு வேலைகளை உடனே செய்யணும்,பசிக்குது நல்ல ஒட்டல்ல போய் சாப்பிடணும் அது ஒரு வேலை இரண்டாவது கொஞ்சம் கயிறு வாங்கி எல்லா செடிகளையும் இழுத்துபிடித்து கட்டணும், இல்லைன்னா சாய்ஞ்சுரும் என்றார்.

இந்தாருங்கள் நுாறு ரூபாய் முதல்ல போய்ச் சாப்பிடுங்க என்று கொடுத்ததும் புன்சிரிப்புடன் வாங்கிக்கொண்டவர் வேகவேகமாக பூங்காவைவிட்டு வெளியில் சென்றார். பாவம் நல்ல பசி போலிருக்கு என்று எண்ணிக்கொண்டிருந்த போது போன வேகத்திலேயே திரும்பிவந்தார்,வந்தவர் கையில் செடிகளை கட்டத்தேவையான கயிறு இருந்தது....


-எல்.முருகராஜ்

murugaraj2006@gmail.com



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

syed vahid.s - trichirappalli,இந்தியா
16-ஜன-201713:29:19 IST Report Abuse
syed vahid.s A Big Salute
Rate this:
Cancel
kumaresan - Virudhunagar,இந்தியா
09-ஜன-201701:48:26 IST Report Abuse
kumaresan வணங்குகிறேன் ஐயா உங்கள் உழைப்புக்கு:
Rate this:
Cancel
S.KUMAR - Chennai,இந்தியா
24-டிச-201617:04:46 IST Report Abuse
S.KUMAR தொழிலை நேசிப்பவர்கள் , dedicated person, Great
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X