பல்கலைகளின் துணை வேந்தர்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவை சந்தித்து, அவர் முன் கைகட்டி நின்ற சம்பவம், கல்வியாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அரசு அதிகாரிகள், போயஸ்கார்டன் சென்று, அவர் முன், கைகட்டி நிற்பது வழக்கம். அவர் மறைந்த பின், அவரது தோழி, சசிகலாவை சந்தித்து, கைகட்டி நிற்கும் நடைமுறையை, பலர் மீண்டும் புதுப்பித்து வருகின்றனர். அரசு பல்கலைகளில், சமீபத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள், போயஸ் கார்டன் சென்று, சசிகலாவை நேரில் சந்தித்தனர். அவர் முன் கைகட்டி நின்று திரும்பினர்.
இது குறித்து, வெளியான புகைப்படத்தை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மக்களின் வரிப்பணத்தில்
சம்பளம், கார், குடியிருப்பு போன்ற வசதிகளை பெறும், பல்கலை துணை வேந்தர்கள், அலுவலக நேரத்தில், தனி நபர் ஒருவரின்
இல்லத்திற்கு 'அப்பா யின்ட்மென்ட்' பெற்று சென்றதற்கு, கடும் எதிர்ப்பு
கிளம்பிஉள்ளது.
இது குறித்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்கு னர், பாடம் நாராயணன் கூறியதாவது: மாணவர் களுக்கு பாடம் கற்பிக்கும் துணை வேந்தர்கள், தங்கள் நேரத்தை வீணாக்கி, ஒரு தனி நபர் இல்லத் திற்கு சென்று, அவரை சந்தித்துள்ள விதம் வேதனைக்குரியது.
துணை வேந்தர்களின் பணி நியமனம் எப்படி நடந் துள்ளது, யார் பின்னணியில் இருந்தனர் என்பதை, இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது குறித்து, பல்கலைகளின் வேந்தரான கவர்னர் விசாரணை நடத்தி, துணை வேந்தர்கள், அவர்களை இயக்கிய, உயர் கல்வி அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சந்தித்தது யார், யார்?
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன்; தமிழ்நாடு டாக்டர்எம்.ஜி.ஆர்.,
மருத்துவ பல்கலை, கீதாலட்சுமி; அன்னை தெரசா பல்கலை, வள்ளி; திருச்சி
பாரதிதாசன் பல்கலை, முத்துக்குமார்; பாரதியார் பல்கலை, கணபதி, திருவள்ளுவர்
பல்கலை, முருகன்; உடற்கல்வி
பல்கலை, மூர்த்தி; தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலை, தங்கசாமி; தமிழ்நாடு கால் நடை மருத்துவ பல்கலை, திலகர்; சட்ட பல் கலையில், கடந்த வாரம் ஓய்வுபெற்ற வணங்கா முடி ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர்.
மறுத்தாரா பதிவாளர்?
அண்ணா பல்கலையில் துணை வேந்தர் இல்லா ததால், பதிவாளர் கணேசன், கார்டன் செல்ல, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டு உள்ளனர். சென்னை பல்கலை பதிவாளர், டேவிட் ஜவஹர், கார்டன் செல்ல மறுத்து விட்டதாக கூறப்படு கிறது. மனோன்மணியம் சுந்தரனார், சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை.
-நமது நிருபர்-
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (158)
Reply
Reply
Reply