புதுடில்லி:'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் வகையில், தொழில் மற்றும் வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'செக்' அல்லது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டு மென, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, ஊதியச் சட்டத்தில், திருத்தம் செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வர்த்தக மற்றும் தொழில் துறை ஊழியர்களுக் கான சம்பளத்தை, செக் அல்லது வங்கிக் கணக் கில் செலுத்துவதை நடைமுறைபடுத்தும்
வகையில், ஊதியச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகி றது.இதற்கான மசோதா, சமீபத்தில் பார்லிமென் டில் தாக்கல் செய்யப்பட்டது; அமளி காரணமாக, அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், இதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அவசர சட்டத்தை நிறைவேற்ற, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. 'அதேநேரத்தில், ரொக்கமாகவும் சம்பளத்தை அளிக்கும் நடைமுறை யும் தொடரும்; அதில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
மற்றமுக்கிய முடிவுகள்
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட் டுள்ள மற்ற முக்கிய முடிவுகள்:
*
குறிப்பிட்ட தொழில்களில் மாற்றங்கள் செய்யும் வகையில், ஆலோசனைகள்
வழங்குவதற்காக,
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், புதிதாக
இந்திய தொழில்முனைவோர் மேம் பாட்டு சேவை என்ற புதிய அமைப்பை உருவாக்க,
ஒப்பதல் அளிக்கப்பட்டது
* பாகிஸ்தான், சீனாவுக்கு எதிரான போரின் போது, நம் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்தவர் களின் சொத்துக்களை விற்க, பரிமாற்றம் செய்ய தடை விதிக்கும் வகையிலான, எதிரி சொத்து அவசர சட்டத்தை, ஐந்தாவது முறையாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (21)
Reply
Reply
Reply