தமிழ்நாடு

மத்திய அரசின் சலுகைகள் மறுப்பு ஜாதிச் சான்றை மாற்ற வலியுறுத்தல்

Added : டிச 22, 2016
Share
Advertisement
சிவகங்கை, மத்திய அரசின் சலுகைகள் மறுப்பதால், ஜாதி சான்றை மாற்றம் செய்ய வலியுறுத்தி சீர்மரபின பழங்குடியினர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தினர். சங்க மாநில பொதுச் செயலாளர் வின்னரசிமல்லிகா தலைமையில் நிர்வாகிகள் தமிழரசன், செல்வேந்திரன், புகழேந்திபாண்டியன் முன்னிலையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில்

சிவகங்கை, மத்திய அரசின் சலுகைகள் மறுப்பதால், ஜாதி சான்றை மாற்றம் செய்ய வலியுறுத்தி சீர்மரபின பழங்குடியினர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
சங்க மாநில பொதுச் செயலாளர் வின்னரசிமல்லிகா தலைமையில் நிர்வாகிகள் தமிழரசன், செல்வேந்திரன், புகழேந்திபாண்டியன் முன்னிலையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சீர்மரபினர் (டி.என்.சி,) பட்டியலில் உள்ளிட்ட பிரமலைக்கள்ளர், கூத்தப்ப கள்ளர், கந்தவர்க்கோட்டை கள்ளர், மறவர், ஆப்பநாடு கொண்டையன்கோட்டை மறவர், செம்மநாட்டு மறவர், வலையர், செட்டிநாடு வலையர், அம்பலக்காரர், வேட்டுவ கவுண்டர், ஊரளாகிக் கவுண்டர் மற்றும் 27 பிரிவு குறவர்கள் உட்பட 68 ஜாதிகள் உள்ளன.
இந்த ஜாதியினருக்கு 1979 வரை சீர்மரபின பழங்குடியினர் (டி.என்.டி.,) என, சான்று வழங்கப்பட்டு வந்தது. அதனை தமிழக அரசு சீர்மரபினராக மாற்றியது. மத்திய அரசு குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டோரை சீர்மரபின பழங்குடியினர் என, கூற வேண்டுமென, தெரிவித்துள்ளது. மேலும் 2014 முதல் சீர்மரபின பழங்குடியினர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஜாதி மாறியதால் உதவித்தொகை தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.
1979 ஜூலை 30ல் வெளியிடப்பட்ட அரசாணை 1310 யை ரத்து செய்துவிட்டு, சீர்மரபினரை, சீர்மரபின பழங்குடியினராக மாற்ற வேண்டும்.
டி.என்.டி., நலவாரிய உறுப்பினர்களை நியமித்து, நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். சீர்மரபின பழங்குடியினர் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் ஒரே மாதிரியான ஜாதி சான்று வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X