அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய நீதிபதி மருதமுத்து தலைமையில் குழு

Added : ஜன 16, 2011
Advertisement

சென்னை : பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைகள் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் குழு அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டசபையில் கடந்த 7ம் தேதி கவர்னர் உரையில், "தமிழகத்தில் பல்லாண்டு காலத்திற்கு முன் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, பஞ்சமர்கள் அல்லாதவர்கள் பட்டா மாறுதல் செய்து வைத்திருப்பதாகவும், காலப்போக்கில் அவற்றைப் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன.


"பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளையும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து, அவர்களிடையே திரும்ப ஒப்படைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, ஐகோர்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது' என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மணிவண்ணன், கருப்பன், நிலநிர்வாக கமிஷனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவை நியமித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X