பொது செய்தி

தமிழ்நாடு

கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்

Updated : டிச 23, 2016 | Added : டிச 23, 2016 | கருத்துகள் (46)
Advertisement
கிரிஜா வைத்தியநாதன், தலைமை செயலாளர், ராமமோகன ராவ், Girija Vaidyanathan, chief secretary, OPS, ஓ.பி.எஸ், panneerselvam, பன்னீர்செல்வம்,

சென்னை: புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று காலையில் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றார். தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். சிக்கிய பணம், தங்கம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.


ஓ.பி.எஸ்சை சந்தித்தார்

இந்நிலையில் ராமமோகன ராவ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நில நிர்வாக ஆணையராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலராக அறிவிக்கப்பட்டார். இவர் 1981 பேட்ச் ஐ.ஏ.எஸ்.., அதிகாரி ஆவார். இவர் இன்று காலை 9. 45 மணியளில் பொறுப்பேற்றார். இன்று அவர் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். முதல்வர் அறைக்கு சென்று, அவரை கிரிஜா வைத்தியநாதன் சந்தித்தார். கிரிஜா 45 வது தலைமை செயலர் ஆவார். மேலும் 4 வது பெண் செயலர். இவர் ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆணையர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
23-டிச-201621:04:32 IST Report Abuse
தமிழ்வேள் இவர் ஊழலில் சிக்காதவராக இருக்கலாம். ஆனால் ஒரு சாதி சார்பானவர். அதனால் தான் மத்திய பிஜேபி அரசு இவர் வரவேண்டும் என விரும்பியது. இவரது குடும்பம், நடிக உறவினர் மூலம் பிஜேபி மற்றும் மத்திய தலையீடு, முக்கியமாக சங்கர மட தலையீடு, அதிகாரம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். என்னதான் தலையால் தண்ணீர் குடித்தாலும், பிஜேபி தமிழகத்தில் கால் ஊன்றும் என்பது பகல் கனவே. அக்கிரகார ராஜ்ஜியம் சென்னையை தாண்டி, குறிப்பாக மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர் தாண்டி கிளை விரித்து வளர்வது என்பது குதிரை கொம்பே. இவர்கள் கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாத /இயலாத, முடியாத கூட்டம். பின் எப்படி வானம் ஏறி வைகுண்டம் போவார்கள். ஏணி அமைத்து கொடுத்தாலும் ஏற முடியாத பஞ்சாங்க கூட்டம்....
Rate this:
Share this comment
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
24-டிச-201602:09:14 IST Report Abuse
Rasu Kuttyநீ திருவள்ளூர் ல இருந்துகிட்டு எல்லாத்தையும் ஏறி புடிச்சுட்டியா??? ஜெலுசில் குடிச்சுட்டு thoongu.......
Rate this:
Share this comment
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
24-டிச-201620:29:30 IST Report Abuse
தமிழ்வேள்உனக்கு ஏன் எரிகிறது? அந்த சாதிக்கு வாலா? எவ்வளவு பட்டாலும் புத்தி வராது? ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது....வெள்ளை தோலுக்கு அடிமைகள்.....
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
23-டிச-201620:42:24 IST Report Abuse
Manian இங்கே பலரும் எல்லா வல்ல ஒரு தலைவரை தேடுகிறார்கள். இரண்டு பக்கம் - மக்களுக்கு நல்லது செய்வது, அரசியல், அரசாங்க வியாதிகளை களை எடுப்பது. சீமை கருவேலம் மரம்போல வளர்ந்துள்ள லஞ்ச வியாதியை (அரசியல், அரசாங்க வியாதியை) இப்போதைக்கு யாராலும் நீக்க முடியாது. உங்கள் வீட்டிலேயே உங்கள் பெற்றோர்களை திருத்த முடியாது, உங்களையே திருத்தி கொள்ள வேண்டும். அதுபோலவே, கிரிஜா அவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார். 70-80% லஞ்சம் வாங்கி ஓட்டுப்போட்டு மக்கள் தேர்ந்து எடுத்த SIIMAI கருவேல மரங்களை ஆணி வேரோடு புடுங்க முடியாது. அது மக்களின் வேலை.
Rate this:
Share this comment
Cancel
Rajendran P - madurai,இந்தியா
23-டிச-201620:02:31 IST Report Abuse
Rajendran P மாண்புமிகு புரட்சி தலைவி அவர்களின் நிர்வாகத் திறமைக்குரிய வாரிசாக மாண்புமிகு ஓ.பி.ஸ் செயல்படுவர் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X