ஜானகி போல் சாதிக்க ஆசை - ஸ்ருதி நாராயணன் லட்சியம்| Dinamalar

ஜானகி போல் சாதிக்க ஆசை - ஸ்ருதி நாராயணன் லட்சியம்

Updated : டிச 25, 2016 | Added : டிச 23, 2016 | |
இளம் வயது சினிமா பின்னணி பாடகி ஸ்ருதி நாராயண், தனது இனிமையான குரலில் பல படங்களில் பாடல்களைப்பாடி ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்து வருகிறார்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தேனிக்கு வந்த அவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அளித்த பேட்டி: சென்னையிலுள்ள கல்லுாரியில் பி.காம்., கார்ப்பரேட் செகரட்டரி ஷிப் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தந்தை பாலநாராயன், மருத்துவ துறையில்
ஜானகி போல் சாதிக்க ஆசை - ஸ்ருதி நாராயணன் லட்சியம்

இளம் வயது சினிமா பின்னணி பாடகி ஸ்ருதி நாராயண், தனது இனிமையான குரலில் பல படங்களில் பாடல்களைப்பாடி ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்து வருகிறார்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தேனிக்கு வந்த அவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அளித்த பேட்டி: சென்னையிலுள்ள கல்லுாரியில் பி.காம்., கார்ப்பரேட் செகரட்டரி ஷிப் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தந்தை பாலநாராயன், மருத்துவ துறையில் உயரதிகாரியாக உள்ளார். தாயார் பானு குடும்பத்தலைவி.நான் வீட்டிற்கு ஒரே பெண். நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன்.படிப்பு மட்டுமின்றி பாட்டுபாடுவதிலும் திறமையை வெளிப்படுத்தினேன். பள்ளி மற்றும் மாவட்ட அளவில் பாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளேன். படிப்பிலும் சுட்டி என நிரூபிக்கும் வகையில் 2015 பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றேன்.

எனது இசை குரு சோலைராஜன். 'டிவி' நிகழ்ச்சியில் பாடியதால் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது. 13 வயதில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தஷி இசையமைப்பில் 'ஒத்தவீடு' என்ற படத்தில் முதலில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக பிளஸ் 1 படித்த போது அபிஜித் ராமசாமி இசையில் 'உ' படத்தில் முருகன் மந்திரம் எழுதிய 'திக்கி திணறுது தேவதை' என்ற பாட்டு பாடினேன். மூன்றாவதாக மரியம் மனோகர் இசையில் 'அகத்தினை' என்ற படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'தந்தையும் நீயே, தாயும் நீயே' என்ற பாடல் பாடினேன். அதற்கு சினிமாத்துறை சார்பில் பிரபல பின்னணி பாடகி 'ஜானகிபேத்தி' விருது கிடைத்தது. இது எனக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று எட்டுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளேன்.

அடுத்ததாக இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த், ஷியாம்டிராஜ் இசையில் பாட தேர்வாகியுள்ளேன். எனது பாடலை பாராட்டி அமைப்புகள் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இமான், ஜிப்ரான், எஸ்.எஸ்.குமுரன், அனிருத், ஜி.வி., பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாட வேண்டும். தெலுங்கிலும் இரண்டு பாட்டுகள் பாடியுள்ளேன். ஜானகி, பாடகர் ஜேசுதாஸ் போன்று சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்காக கடுமையாக பயிற்சி பெற்று வருகிறேன்,என்றார்.
இவரை வாழ்த்த...92454 44151

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X