தல...தளபதியுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகை சூசன் ஜார்ஜ்| Dinamalar

'தல...தளபதி'யுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகை சூசன் ஜார்ஜ்

Updated : டிச 25, 2016 | Added : டிச 23, 2016 | |
இன்றைய இளைஞர்களை தனது நடிப்பால் ஈர்ப்பவர், நடிகை சூசன் ஜார்ஜ். அனைவரையும் சட்டென திரும்பி பார்த்து பேச வைக்கும் அகன்ற விழிகள், காண்போரை பரவசப்படுத்தும் சிவந்த முகம்,சிரிக்கும்போது சிறகடித்து பறக்க வைக்கும் முத்துப்பல் வரிசை போன்றவை இவரின் தனிச்சிறப்பு. கடந்த நான்கு ஆண்டாக வெள்ளித்திரையில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் 'பிசி'யாக
'தல...தளபதி'யுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகை சூசன் ஜார்ஜ்

இன்றைய இளைஞர்களை தனது நடிப்பால் ஈர்ப்பவர், நடிகை சூசன் ஜார்ஜ். அனைவரையும் சட்டென திரும்பி பார்த்து பேச வைக்கும் அகன்ற விழிகள், காண்போரை பரவசப்படுத்தும் சிவந்த முகம்,சிரிக்கும்போது சிறகடித்து பறக்க வைக்கும் முத்துப்பல் வரிசை போன்றவை இவரின் தனிச்சிறப்பு. கடந்த நான்கு ஆண்டாக வெள்ளித்திரையில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் 'பிசி'யாக இருந்த அவர் தினமலர் 'சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக அளித்த பேட்டி

* உங்களைப் பற்றி...
பிறந்தது பெங்களூரு. படித்து வளர்ந்தது சென்னை. சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். தந்தை ஜார்ஜ் மதன், தொழிலதிபர். அண்ணன் ஷியாம், சின்னத்திரை சீரியல்களுக்கு கதை வசனம் எழுதி வருகிறார்.

* நடிப்பு அனுபவம் ...
கனவில் கூட நான் சினிமாவில் நடிப்பேன் என நினைத்து பார்த்தது கிடையாது. அண்ணனுடன் ஒருநாள் வெளியில் சென்றபோது அவரது நெருங்கிய நண்பரை சந்தித்தேன். அவர் மூலமாக எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் நடித்த முதல் சினிமாவான மைனாவிற்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக இருந்தது. அதில் எஸ்.ஐ., மனைவியாக நடித்துள்ளேன்.

* எத்தனை படங்கள் நடித்துள்ளீர்கள்...
மைனாவுக்கு பின் நண்பேண்டா, அர்ச்சுனன் என் காதலி, நர்த்தகி, ராரா, பேச்சியக்காள் மருமகள் உட்பட 7 படங்கள் நடித்துள்ளேன். தற்போது ஒரு படம் நடித்து வருகிறேன். அதற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.

* சின்னத்திரை அனுபவம்...
'டிவி' சீரியல்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறேன். இருப்பினும் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.

* சினிமா துறையில் இடைவெளிக்கு காரணம்...
மைனா படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்கவில்லை. முழுமையாக குடும்பத்தினரை கவனித்துக்கொண்டேன். தற்போது மீண்டும் பட வாய்ப்பு கிடைத்து வருகிறது.

* பிடித்த ஹீரோ...
சிறுவயதில் இருந்தே அஜித், விஜய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் நடித்த படங்களை தவறாமல் பார்ப்பதுண்டு. இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்கள். அவர்களின் அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும். அவர்களுடன் ஹீரோயினாக நடிக்க ஆசை.

* உங்களின் ரோல் மாடல் யார்...
நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சரிதாவைப் போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் முகபாவத்தை மாற்றிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

* எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க விருப்பம்...
கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அது எனக்கு பிடித்திருந்தால் 'ஓகே' சொல்லிவிடுவேன். திறமை இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும்.
தொடர்புக்கு... www.facebook.com#susangeorge

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X