புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் புக்கு முன், அது குறித்து விவாதிக்க, ரிசர்வ் வங்கிக்கு போதிய அவகாசம் தரப்பட்டதா என, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கேள்வி எழுப்பிஉள்ளார்.
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பார்லி மென்ட் நிதி நிலைக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில், நிலைக்குழு வுக்கு ஆலோசனை வழங்க, நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பலர், இந்தக் குழுவில் ஆஜராகி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த,
பார்லிமென்ட் நிதி நிலைக்குழு கூட்டத்தில், காங்., முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் ஆஜரானார்.
அப்போது அவர், கூறியதாவது:
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்துவிவாதிப்பதற்கு, ரிசர்வ் வங்கிக்கு போதிய அவ காசம் அளிக்கப்பட்டதா... ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த முடிவை, நவ., 7ல், மத்திய அரசு எடுத்தது. அது குறித்து, ரிசர்வ் வங்கி போர்டு, நவ., 8ம் தேதி விவாதித்தது என, கூறப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து விவாதிக்க போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை.இந்த பிரச்னை குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேலின் கருத்தை தெரிந்து கொள்வதற்கு முன், நிதித் துறைஉள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளின் கருத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையில், உர்ஜித் படேல், அடுத்த ஆண்டு, ஜன., 18 அல்லது 19ல், பார்லிமென்ட் நிலைக் குழு முன் ஆஜராகி, கருத்தை பதிவு செய்வார்
என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன், ஜன., 11 அல்லது 12ல், நிதித் துறை உள்ளிட்டவற்றின் முக்கிய அதிகாரிகள் கருத்துகளை பதிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைக்குழுவின் அடுத்தக் கூட்டத்தில், செல் லாத ரூபாய் நோட்டு விவகாரத்தைத் தொடர் ந்து, பணத் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக் கப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (38)
Reply
Reply
Reply