சென்னை:'ராமமோகன ராவ் விவகாரத்தில், மேல்மட்டத் தலைவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கூறிஉள்ளார்.
அவரது அறிக்கை:
தலைமை செயலகம் என்பது கவர்னர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் என,
அரசியல் சட்ட அதிகாரம் படைத்த, அனைவரும் பணியாற்றும் இடம். அங்கே சோதனை நடத்தப் பட்டிருப்பது, மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் உகந்தது அல்ல.
சீர்குலைவு
இந்த சோதனையின்போது, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்ததன் மூலம், தமிழக போலீஸ் துறையின் மதிப்பு, மரியாதை சீர்குலைந்து விட்டது. ராமமோகன ராவ் மீதான சோதனை குறித்த தகவல் கள் அனைத்தையும், எவ்வித தாமதமும் இன்றி, மாநில அரசுக்கு, வருமான வரித்துறை அனுப்பி வைக்க வேண்டும்.
விரிவான அறிக்கை
அதுமட்டுமின்றி, இந்த ஊழலில் தொடர்புடைய,
மேல்மட்ட தலைவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது. இந்த சோதனை கள் குறித்து, முதல்வர் விரிவான அறிக்கை வாயிலாக, உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (46)
Reply
Reply
Reply