லஞ்சமா வாங்குறாரு நெய்... வாயில வர்றதெல்லாம் பொய்!

Added : டிச 27, 2016
Advertisement
லஞ்சமா வாங்குறாரு நெய்... வாயில வர்றதெல்லாம் பொய்!

தடாகம் ரோட்டில், ஜி.சி.டி.,யின் முன்பாக, மித்ராவுக்காக காத்திருந்தாள் சித்ரா. வண்டியில் அவள் வந்து நிற்க, பின்னால் இருந்த பெண் இறங்கி, 'தேங்ஸ்' என்றபடி, நடந்து சென்றாள்.
அக்கறையாக, 'யாருடி அது' என்று விசாரித்தாள் சித்ரா.
''யாருன்னு தெரியாது; லிப்ட் கேட்டாங்க; கொடுத்தேன்'' என்றாள் மித்ரா.
''லுாசுத்தனமா இப்பிடி யாருக்கு வேணும்னாலும், 'லிப்ட்' கொடுக்காதடி. போன வாரம் இப்பிடித்தான், கூரியர் சர்வீஸ் கம்பெனியோட ஆட்டோக்காரர்ட்ட, ராத்திரியில ஒருத்தன், போலீஸ்ன்னு, 'லிப்ட்' கேட்ருக்கான். வாக்கி டாக்கி, பிஸ்டலோட வந்ததைப் பார்த்து, அவனும் நம்பிட்டான்'' என்று சித்ரா சொல்லும்போதே, இடை மறித்தாள் மித்ரா.
''ஏன்க்கா... அவன் உண்மையான போலீஸ் இல்லையா?''
''ஆமா மித்து! மறுநாள் காலையில ஆட்டோவை அவரு சுத்தம் பண்றப்பதான், 'டேஷ்போர்டு'ல பிஸ்டல் இருந்ததைப் பாத்திருக்காரு. உடனே, சூலுார் போலீஸ் ஸ்டேஷன்ல போய்க் கொடுத்திருக்காரு. பிஸ்டலைப் பார்த்த போலீஸ்காரங்க, மெரண்டுட்டாங்க. ஏன்னா, அது போலீஸ் துப்பாக்கியே இல்லை.''
''அச்சச்சோ! அப்பிடின்னா அவன் போலீசே இல்லையா?''
''அதுல என்ன சந்தேகம்... பாவம் அந்த ஆட்டோ டிரைவரை நாள் முழுக்க விசாரிச்சிருக்காங்க. சிட்டிக்குள்ள போலீஸ் வேடத்துல, பிஸ்டல், வாக்கி டாக்கியோட எவனோ சுத்துறான்னா, நம்ம ஊருக்கு என்ன பாதுகாப்பு இருக்கு?'' என்றாள் சித்ரா.
''நம்ம சிட்டி போலீஸ், திருடனுக்கு தான் பாதுகாப்பு கொடுக்குது. ஜனங்க பாடு திண்டாட்டம் தான்,'' என்றாள் மித்ரா.
''நீ ஏதோ பொடி வச்சுப் பேசுறது மாதிரி இருக்கே!'' என்றாள் சித்ரா.
''இது பொடி மேட்டர் இல்லை. 'விசிடி' மேட்டர். வெரைட்டி ஹால் ரோட்டுல, போன வாரத்துல பாண்டியன்னு ஒருத்தனை ஸ்பெஷல் டீம் பிடிச்சிருக்காங்க. அவன்ட்ட, பிடிபட்டதெல்லாம், 'அந்த மாதிரி விசிடி' தான். கொஞ்சம் புதுப்படங்களும் இருந்திருக்கு. அவனோட 'நெட்வொர்க்'கைப் பார்த்து டீமே அதிர்ந்து போயிருச்சு''
''ஏன்...வெளிநாட்டுல இருந்து விசிடி இறக்குமதி பண்றானா?''
''அதில்லைக்கா...பல வருஷமா அவன் இந்தத் தொழில் பண்ணிட்டு இருக்கானாம். ஆனா, வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கேஸ் கூட, 'பைல்' பண்ணலையாம். விசாரிச்சதுல, எல்லா போலீஸ் ஆபீசருக்கும் இந்த மாதிரி 'விசிடி'க்களை அவன் தான் 'சப்ளை' பண்ணிருக்கான். இது எப்பிடி இருக்கு?''
மித்ராவின் பேச்சைக் கேட்காமல், பின்னால் ஏறி உட்கார்ந்த சித்ரா, வண்டியை லாலி ரோட்டில் விடச் சொன்னாள்.
''மித்து! மருதமலை ரோட்டுல ராத்திரியில வண்டியே ஓட்ட முடியாது. ஒரே கும்மிருட்டு. ரோடை 'வைடன்' பண்ணுன பிறகு, 'லைட்'டே போடலை. சம்மந்தப்பட்ட கான்ட்ராக்டர்ட்ட எந்த அதிகாரியும் பேச முடியலையாம். அவுங்களையே அவரு மெரட்டுறாராம்...''
''கை நீட்டி காசு வாங்குன அதிகாரிகளால, எப்பிடி கம்பீரமா மெரட்ட முடியும்?'' என்றாள் மித்ரா.
''வழக்கமா காசு கேட்டு மெரட்டுற ஆபீசர், இப்போ காசே வேண்டாம்; நகையா கொடுங்கன்னு கேக்குறாராம்,'' என்று, மேட்டரை மாற்றினாள் சித்ரா.
''ஏன்... அவுங்க லேடி ஆபீசரா?''
''அவரு 'லேடி' இல்லை; ஏடி... ஆபீசர். நஞ்சப்பா ரோட்டுல இருக்குற கார்ப்பரேஷன் காம்ப்ளக்ஸ்ல இருக்குற 'டவுன் பிளானிங்' ஆபீஸ்ல, கோவை ரூரல், திருப்பூர், நீலகிரின்னு மூணு மாவட்ட பகுதிகளைக் கவனிக்கிற அந்த ஆபீசர் தான், இப்பிடி பொருளா கேக்குறாராம். ஆனா, வெளியில நான் ரொம்ப நேர்மைன்னு பொய்யா அள்ளி விடுறாராம்...''
''நகையா வாங்குறாரா...வேற பொருளா வாங்குறாரா...கரெக்டா சொல்லு!''
''பேருக்கேத்தது மாதிரி, 'செல்வம்' சேர்க்கணும்னு, நகையும் வாங்குறாரு; பொருளும் வாங்குறாரு. திருப்பூர்னா பனியன், நீலகிரின்னா ஏலம், டீ எல்லாம் வாங்குறாராம். ஒரு நெய்க்கம்பெனிக்காரரு, கட்டட அனுமதி கேட்டதுக்கு, அவர்ட்டயும் கிலோக்கணக்குல நெய் அனுப்பச் சொல்லீட்டாராம்...''
சித்ரா சொன்னதைக் கேட்டுக் கொண்டே, வண்டியை ஓட்டிச் சென்ற மித்ரா, அங்கிருந்த ஒரு கிளினிக்கைப் பார்த்ததும், ஏதோ நினைவுக்கு வந்தவளாய் அடுத்த விவகாரத்தை ஆரம்பித்தாள்.
''அக்கா! சென்னை மாதிரியே நம்மூர்லயும் ஏகப்பட்ட இடங்கள்ல, 'ஐ.டி., ரெய்டு' நடந்துட்டு இருக்கு. ஆனா, விஐபி வீடு யாரும் இல்லாததால, வெளியில விஷயம் வர்றதில்லை. போன வாரத்துல, நாலு டாக்டர்கள் வீட்டுல, 'ரெய்டு' நடந்திருக்கு...''
''டாக்டர்ன்னா... பெரிய ஹாஸ்பிடல் நடத்துறவுங்களா?'' என்றாள் சித்ரா.
''இல்லை; எல்லாருமே பெரிய ஹாஸ்பிடல்கள்ல வேலை பார்க்கிறவுங்க தான். பெருசா எதுவும் சிக்குனது மாதிரித் தெரியலை. சில டாக்டர்கள், அவுங்களா முன் வந்து, 'டாக்ஸ்' கட்டிருக்காங்க. ஆனா, ஊருல இருக்கிற டாக்டர்க எல்லாம் ஆடிப்போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
நானுமொரு ஐ.டி., மேட்டர் சொல்றேன் என்ற சித்ரா, ''கோவை, பி.பி., ஸ்ட்ரீட்டுல இருக்கிற மூன்றெழுத்து பெரிய ஜூவல்லரில போன வாரம் ஐ.டி., ரெய்டு நடந்திருக்கு. அங்கு கணக்கு பார்க்குறவரு வீட்டுக்கும், ஆபீசருங்க போயி ரெய்டு பண்ணீருக்காங்க. அப்ப, அங்க இருந்த 'கணக்கோட' அம்மா, அதிர்ச்சியில அப்படியே உசுர விட்டுட்டாங்க. இத பார்த்து பயந்து போன ஆபீசருங்க, 'ஷாக்'காகி அப்படியே விட்டுட்டு போயிட்டாங்களாம்,'' என, மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள் சித்ரா.
வழியில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள், ஏதோ கூச்சல் போட்டுக்கொண்டிருந்தனர்.
''வரவர இந்த, 'நார்த் இண்டியா' பசங்களைப் பார்த்தாலே, பயமா இருக்கு மித்து,'' என்றாள் சித்ரா.
''ஏன்க்கா... அவுங்க இல்லேன்னா நம்மூர்ல உழைக்கிறதுக்கு ஆளே இல்லியே,'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் சரி தான் மித்து... ஆனா, அவுங்க நடந்துக்கிறதைப் பார்த்தா, பயம் தான் வருது. போன வாரம், 85 வயசு பாட்டியை பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணி, கொலை பண்ணிருக்கான் 24 வயசு பையன்,'' என்றாள் சித்ரா.
''அக்கா! அங்க நடந்தது என்னன்னு தெரியுமா...அந்தப் பையன் மணிப்பூர்க்காரன். நாகலாந்து பையன் ஒருத்தனோட, 'பர்த்டே'க்கு வந்திருக்கான். எல்லாரும் சேர்ந்து சரக்குப் போட்டு, சந்தோஷமா இருந்திருக்கானுக. இருட்டுல இந்த பாட்டியைப் பார்த்து, பின்னால போன அவன், பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணிருக்கான்...''
''ஓ... அவனுகளும், தமிழ்நாட்டுக்கு வந்து 'குடிமகன்' ஆயிட்டானுகளா?'' என்றாள் மித்ரா.
''ஆமாமா... அந்தப் பாட்டி சத்தம் போட்ட பிறகு தான், அது பாட்டின்னு தெரிஞ்சு இருக்கு. அப்புறம் தான், வெளியே தெரிஞ்சா அசிங்கமாயிரும்னு, துணியை வச்சு கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு, திருட்டுக்கு நடந்ததுன்னு திசை திருப்புறதுக்காக, வளையலை திருடிட்டுப் போயிருக்கான்,'' என்றாள் சித்ரா.
வண்டியை நிறுத்தி விட்டு, இருவரும் ஓட்டலுக்குள் புகுந்தனர். ஓட்டலில் உள்ள 'டிவி'யில், 'கோவையில் மேலும் ஒரு ஆண் யானை சாவு' என்று 'ஸ்க்ரோலிங்' ஓடியது.
''அக்கா! நம்மூர்ல அநியாயத்துக்கு யானைங்க இறந்துட்டு இருக்கே. என்னக்கா பிரச்னை?'' என்றாள் மித்ரா.
''பல காரணங்கள் இருக்கு. ஆனா, எந்த யானை இறந்ததுக்கும் உண்மைக் காரணத்தைச் சொல்லவே மாட்டேங்கிறாங்க. அதுலயும் இப்ப இருக்கிற 'டிஎப்ஓ' மேல ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' சொல்றாங்க. அவருக்கும், கன்சர்வேட்டருக்கும் ஏழாம் பொருத்தமா இருக்காம். ஒண்ணு சேர்ந்து உருப்படியா ஒரு வேலையும் செய்யுறதில்லையாம்,''
''நானும் கேள்விப்பட்டேன்... சத்தியில எல்லார்ட்டயும் நல்லா பழகுன டி.எப்.ஓ., இங்க யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழுறாராம். ஆளே மாறிட்டாருங்கிறாங்க,''
''அது என்ன காரணமோ தெரியலை... ஆனா, யானைகளைத் துரத்துற வேட்டை தடுப்பு காவலர்களை துரத்துன, லேடி பாரஸ்ட் ஆபீசர் பத்தி ஒரு மேட்டர் சொல்றேன்,'' என்றாள் சித்ரா.
''யாரு...அந்த 'அசிஸ்டென்ட்' ஆபீசரா?'' என்று கேட்டாள் மித்ரா.
''அவுங்களே தான். ஏபிடபிள்யுவா இருக்குறவங்களே பரிதாபத்துக்குரியவங்க. உயிரை வெறுத்து காட்டைக் காப்பாத்துற அவுங்களுக்கு, ஏழாயிரம் ரூபா தான் சம்பளம். அதுவும் முழுசா கிடைக்காது. அவுங்க 'பிட்னஸ்' சரியில்லைன்னு 25 கி.மீ., ஓடணும்னு அந்தம்மா சொல்ல, 22 பேரு நிரந்தரமா வேலைய விட்டே ஓடிப் போயிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
இருவரும் வடை, காபிக்கு 'ஆர்டர்' கொடுத்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தனர்.
''ஓட்டலை ரொம்ப சுத்தமா வச்சிருக்காங்கள்ல'' என்று பாராட்டினாள் மித்ரா.
''சுத்தம்னு சொன்னதும் எனக்கு 'சுவாச் பாரத்' ஞாபகம் வந்துருச்சு. கார்ப்பரேஷன்ல 'சுவாச்கட்டா'வை 'டவுன்லோடு' பண்றதுக்கு பிரசாரம் பண்றாங்களே. அதைப் பத்தி எந்த ஆபீசருக்குமே, 'பிராப்பரா' தகவல் தெரிவிக்கலையாம். அதுக்காக வண்டிக வந்த பிறகு தான் மேட்டர் தெரிஞ்சு, அதிகாரிங்க கடுப்பாயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அதுக்கு மட்டுமா...எதை எடுத்தாலும் என்.ஜி.ஓ.,க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறார்ன்னு கமிஷனர் மேல பல ஆபீசர்க, செம்ம கடுப்புல இருக்காங்க,''
''அதை விட, கார்ப்பரேஷன் பங்ஷனுக்கு வர்ற பயனாளிகள் பயங்கர கோபமா இருக்காங்க. எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், டீ, ஸ்நாக்ஸ், சாப்பாடு எதுவுமே தர்றது இல்லியாம். கேட்டா, 'பண்ட் எதுவுமே இல்லை'ன்னு பஞ்சப் பாட்டு பாடுறாங்களாம்,''
''இங்க மட்டுமா? மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இருக்கே. அங்கயும் பத்துப் பன்னெண்டு வில்லேஜ் பஞ்சாயத்துகளுக்கு வேலை உறுதித் திட்டத்துக்குத் தர வேண்டிய பணத்தை மூணு மாசமா தராம இழுத்தடிக்கிறாராம், அங்க இருக்குற ஆபீசர். கேட்டா 'ஆன்லைன்'ல ரூபா வரலைங்கிறாராம்,'' என்றாள் மித்ரா.
''ரூபா வரலையோ, ரூபன் வரலையோ... எனக்கு ஏன் இன்னும் வடை வரலை,'' என்ற சித்ரா, சத்தமாய் சர்வரை அழைத்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X