புதுடில்லி:'அரசு துறைகள், வாடகைக்கு கார் களை எடுக்கும்போது, 'டாக்சி' என்ற பெய ரில் பதிவு செய்யப்பட்ட கார்களை மட்டுமே வாடகைக்கு எடுக்க வேண்டும்' என, மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த, 1990களில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்தின்படி, அரசு பணிகளுக்கு, அரசே கார் களையும், டிரைவர் களையும் பயன்படுத்துவ தால், ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானது; இப்போதைய கணக்குப் படி, இச்செலவு இன்னும் அதிகரிக்கலாம்.
வாடகை கார்: அதே நேரத்தில், வாடகை கார்களை பயன்படுத்தும்போது, மாதத்துக்கு, 26 ஆயிரம் ரூபாய் வரையே செலவாகும் என்றுதெரிந்ததால், புதிய கார் வாங்குவது, டிரைவர்களை நியமிப்பது ஆகிய நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு, வாடகை கார்கள் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதில், சில மோசடிகள் நடப்பதாக, மத்திய கண்காணிப்பு ஆணையம், நிதி அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது.
உத்தரவு
சில உயர் அதிகாரிகள், தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு, 'கான்ட்ராக்' கொடுத்துவிடுகின்ற னர்; வேறு சில உயரதிகாரிகள், மிக வும் விலை உயர்ந்த கார்களை
வாங்கி, மற்றொ ருவர் பெயரில், அதை வாடகைக்கு எடுத்து, மோசடி செய்கின்றனர்.
இந்த மோசடிகளை மத்திய கண்காணிப்பு ஆணை யம் நிதி அமைச் சகத்துக்கு வெட்ட வெளிச்சமாக்கி யுள்ளது.
அதைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சகம், சில புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் படி, 'டாக்சி என்ற பெயரில் பதிவு செய்யப்பட் டுள்ள கார்களை மட்டுமே வாடகைக்கு எடுக்க வேண்டும். ஒவ்வொரு பயணத்துக்கும், அதற் கான காரணம், பயணம் செய்த தொலைவு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (4)
Reply
Reply
Reply