விண்ணைத்தாண்டி சாதிக்கும் பெண்கள்| Dinamalar

விண்ணைத்தாண்டி சாதிக்கும் பெண்கள்

Added : டிச 27, 2016 | கருத்துகள் (1)
Advertisement
விண்ணைத்தாண்டி சாதிக்கும் பெண்கள்

'அன்று அடுப்பூதிய பெண்கள்இன்று ஆகாயத்தில்''காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்'
என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம், இன்று காற்றோடு காற்றாக, 'பைலட்' ஆகப் பறந்து கொண்டிருக்கின்றனர்.'பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்' என கவிமணி மிக அழகாகப் பெண்ணின் பெருமையை எடுத்துக் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெண்ணானவள் அகிலத்தையே ஆளும் சக்தி வாய்ந்தவள். இருந்தாலும், அன்றைய காலங்களில் பெண் பிள்ளை என்றால் கள்ளிப்பாலை ஊற்றிக் கொலை செய்யும் கொடுமை தற்போது மாறி, பெண் பிறப்பு பெருமை அடைந்துள்ளது.
வரதட்சணை மாறவில்லை
பெண்களின் நிலை அன்றும், இன்றும் மாறுபட்டாலும் வரதட்சணை என்ற ஒன்று மட்டும் இன்னும் மாறவே இல்லை என்பது வேதனையான விஷயம் தான். ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் அழகாகப் பிறந்தாலும், பொன் அள்ளி வைத்தால் தானே அவள் தோளில் பூமாலை ஏறும். அர்ச்சனை இல்லாமல் கூட திருமணம் நடக்கும்; ஆனால், வரதட்சணை இல்லாமல் திருமணம் நிச்சயித்தாலும் நடக்காது. பொன், பொருள் இல்லாத ஏழைப் பெண்ணிற்கு என்றுமே தனிமைக் கோலம் தான். என்று தணியும் இந்த கொடுமை காலம்.
அடுக்களை அர்ப்பணிப்பு
'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று, அன்றாட வாழ்வினை சமையலறையில் கழித்தனர் அன்றைய பெண்கள். பருவம் அடைந்த பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதித்தனர்; பிற ஆண்களிடம் பேச அஞ்சினர். அது மட்டுமின்றி வெளி உலகம் அறியும் முன்பே இளம் வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்து தந்தை, கணவன், சகோதரன் என, ஆணுக்கு கட்டுப்பட்டு அவர்களை சார்ந்தே தன் சுயத்தை இழந்து வாழ்ந்தார்கள்.
இதற்கு உதாரணமாக ஓர் கவிதை...
'எட்டாவது பெண்ணாய் என் ஜனனம்எள் கருப்பாய் என் தேகம்பனிரெண்டில் திருமணம்பதினான்கில் பெண் குழந்தைமாலை வந்தால் அடி விழும்மயங்கிய இரவில் கடி விழும்ரணமாய் ஆனது என் தேகம்வெளியே சொன்னால் அவமானம்சமதர்மம் என்றது சமுதாயம்உடல் சரிபாதி என்றது ஆன்மிகம்மண்ணும் விண்ணும் பெண் என்பர்மனுஷிக்கு ஏனோ? மதிப்பில்லை!'இது போன்று அன்றைய பெண்கள், தங்கள் திறமைகள் அனைத்தையும் அடக்கிக் கொண்டு, பிறருக்காக வாழ்ந்து தங்கள் வாழ்வை அடுக்களையில் அர்ப் பணித்து வந்தனர்.இவ்வுலகில் உள்ள அனைத்துப் படைப்புகளையும் விட, சிறந்த படைப்பு தாய்மை உள்ளம். தனக்கென்று எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பிறர்க்கென்று வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத படைப்பு தாய்மை. எனவே தாய்மைக்கு இணை வேறு எந்த சாதனையும் இவ்வுலகில் இல்லை. தாய்மை உள்ளம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் சாதனையாளர்களே!வீட்டு வாசலை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த பெண்கள் விண்வெளி வாசலையும் எட்டிப்பார்த்து வந்தனர். 'கல்பனா சாவ்லா', 'சுனிதா வில்லியம்ஸ்' போன்ற சாதனைப் பெண்களை நினைக்கும் போது பெண் மனம் பேரானந்தம் அடைய வேண்டும்.
'விண்ணைத் தாண்டி வந்தவண்ணச்சிட்டு கல்பனா சாவ்லாவிண்ணை சுற்றிய சூறாவளிசுனிதா வில்லியம்ஸ்'இவர்களைப் போன்ற சாதனைப் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்,'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்சான்றோன் எனக் கேட்ட தாய்' என பெருமிதம் கொள்ள வேண்டும் அல்லவா!புதுமைப் பெண்கள் நிமிர்ந்த நன்னடைநேர்கொண்ட பார்வையும்நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவதில்லையாம்அமிழ்ந்து பேரிருளாமறாமையில்இவலமெய்திக் கலையின்றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்உதயகன்னி உரைப்பது கேட்டீரோ!என்ற, முண்டாசுக் கவிஞர் பாரதி யின் கூற்று இன்று மெய்யானது என்பதை அறியும் போது மனம் பெருமை அடைகிறது.அன்று 'ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என பாரதி கூறிய பாப்பா, இன்று பாட்மின்டனில் பட்டைய கிளப்பிய பி.வி. சிந்துவை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.'சின்னஞ்சிறு குருவி போல நீ திரிந்து பறந்து வா பாப்பா' என்ற, கவிஞரின் கருத்தை உறுதிப்படுத்தி விண்வெளிப் பாதையில் பறந்த கல்பனா சாவ்லா, சுனிதாவை நாம் சிரம் தாழ்ந்து வணங்க வேண்டும்.
பெண்களின் நாட்டுப்பற்று
காலம், காலமாக வீட்டை மட்டுமே துாய்மையாக வைத்திருக்கும் பெண்கள் தற்காலத்தில், நாட்டையும் சுத்தம் செய்யும் எண்ணத்தில் ஆண்களோடு இணைந்து துப்புரவுப் பணியாளர்களாக களம் இறங்கிவிட்டனர். பெண்களின் இந்த துாய்மைப்பணி வருங்காலத்தில், 'துாய்மை இந்தியா' என்று நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமையப் போகிறது என்றால் இதற்குக் காரணம், ஒவ்வொரு பெண்களும் வீட்டைப் போலவே நாட்டையும் எண்ணும் உயரிய பண்புதான். விதை விதைத்ததில் இருந்து, விளைச்சல் வரும் வரை வயல்களில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் வணக்கத்திற்கு உரியவர்கள்.
ஓயாத உழைப்பு
அன்றைய காலத்தில் பெண்கள் தன் கணவனை இழந்து விட்டால், உடனே உடன் கட்டை ஏறி தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் கோழைகளாக இருந்தனர். ஆனால், இன்றைய காலத்தில் தன் குழந்தைகளுக்காக வாழ்ந்து அவர்களை சமூகத்தில் ஓர் உயரிய பதவியில் அமரச்செய்யும் வரை ஓயாது உழைத்து, இறுதியில் வெற்றி வாகை சூட்டிக் கொள்கின்றனர்.பெண்களே... உங்கள் உயர்வினை நோக்கிப் பயணம் செய்யுங்கள். இமயத்தை யும் அடையலாம் இமைப்பொழுதில்! பெண்ணே உன் வழியை நோக்கிப்புறப்படு, உன் வழி முள் நிறைந்து இருந்தாலும், அதனை நல் மனதார ஏற்றுக்கொள்; இறுதியில் அந்த ஆகாயமும் உன்னை சகோதரியாக எண்ணி உன்னிடம் கைகோர்த்துக் கொள்ளும்.
- எஸ்.விஜயலட்சுமிஆசிரியை, சென்னை

ksviji88@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivaprakash - chennai,இந்தியா
15-ஜன-201711:39:06 IST Report Abuse
sivaprakash குட் , சூப்பர் ,,,, ட்ரை யு கேன் அசையவே வாட் எவர் யு லைக் . பய sivaprakash
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X