காலில் தங்க கொலுசு அணிவித்து மகளை சிதைக்கு அனுப்பிய தந்தை | Dinamalar

காலில் தங்க கொலுசு அணிவித்து மகளை சிதைக்கு அனுப்பிய தந்தை

Updated : டிச 29, 2016 | Added : டிச 28, 2016 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காலில் தங்க கொலுசு அணிவித்து மகளை சிதைக்கு அனுப்பிய தந்தை

திருவனந்தபுரம்: கேரளாவில், விபத்தில் பலியான, தன் மகள் விருப்பப்படி, காலில் தங்க கொலுசு அணிவித்து, தகன மேடைக்கு, தந்தை அனுப்பிய சோகமயமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்.கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர், அனில். இவர் மகள், அனாகா, பிளஸ் 2 படித்து வந்தார். சமீபத்தில் நடந்த விபத்தில், அனாகா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல நாள் சிகிச்சைக்கு பின்னும், அவர் உடல் நிலை சீராகவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்தினம், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். விபத்து நடப்பதற்கு முன், அனாகாவின் தங்க கொலுசுகளை, அனில் அடகு வைத்திருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன், அந்த கொலுசுகளை பெற்றுத் தரும்படி, தந்தையிடம், அனாகா ஆசையாக கேட்டிருந்தார்; அதை எண்ணி கலங்கிய அனில், நண்பர்களிடம் கடன் வாங்கி, அந்த கொலுசுகளை மீட்டார். அனாகாவின் இறுதி ஊர்வலத்தின்போது, அவர் விருப்பப்படி, அவரது உடலில் விலை உயர்ந்த ஆடையை அணிவித்த அனில், கால்களில், தங்க கொலுசுகளை அணிவித்தார். அதன் பின், கலங்கிய கண்களுடன், தன் மகளை, தகன மேடைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகக் கடலில் ஆழ்த்தியது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madurai Ravi - Tamilnadu,இந்தியா
29-டிச-201621:22:24 IST Report Abuse
Madurai Ravi எல்லாம் வல்ல இறைவனிடம் இந்த தந்தைக்கு மன ஆறுதல் கிடைக்க பிராத்தனை செய்கின்றேன்
Rate this:
Share this comment
Cancel
K.S.R.Samy -  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201616:06:18 IST Report Abuse
K.S.R.Samy மகளின் ஆசையை நிறைவேற்றிய தந்தையின் மனம் அமைதிபெற இறைவனை பிறத்திக்கிறேன
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-டிச-201614:56:13 IST Report Abuse
Pasupathi Subbian மனதை உலுக்கும் செய்தி . அந்த தகப்பனின் நிலை மிக பாவமானது. வழக்கமாக பெண்குழந்தைகள் மீது பெற்றோரில் ஒவ்வொரு தகப்பனுக்கும் அதீத பாசம் இருக்கும் அவர்களை கண்டதும் தனது தாயாரின் மறு வடிவமாகவே அவனுக்கு எண்ணம் வரும். அந்த குழந்தைக்கு தன்னால் முடிந்த அளவு சவ்கரியம் செய்வதே அவனது வாழ்நாள் லட்சியமாக இருக்கும். இந்த நிலையில் அவளின் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அவளின் தங்க கொலுசை அடமானம் வைத்து , அதுவும் தோற்றுப்போய் , சே அந்த தகப்பனின் நிலை. இருக்கும்போது அவளை காக்கமுடியாமல்போகும்பொழுது அவனின் மனோ நிலை மிகவும் பாதிக்கப்படும். அவருக்கு ஆறுதல் கூறி அவரை சமாதான படுத்தவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X