செல்லாத, 1,000 - 500 ரூபாய் நோட்டுகளுக் கான சட்ட அந்தஸ்தை நிரந்தரமாக நீக்கும் நோக்கத்தில், அவற்றை வைத்திருந்தால், அபரா தம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படும் என்றும் தெரிகிறது; இதன்படி, மார்ச், 31க்கு பின், செல்லாத நோட்டுகளை வைத்திருப் பது சட்டப்படி குற்றம்.
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாதென, பிரதமர், நரேந்திர மோடி அறிவித்தார். அவற்றை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30ம் தேதி வரை, அவகாசம் தரப்பட்டது.
இந்நிலையில், செல்லாத நோட்டுகளை, மார்ச், 2017க்கு பின் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு, பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, 10க்கும் மேற்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால், 10 ஆயிரம் ரூபாய் அல்லது வைத்திருக்கும் பணத்தின் மதிப்புக்கு ஐந்து மடங்கு, இதில் எது அதிகமோ, அந்த தொகை, அபராதமாக விதிக்கப்படும்.
மேலும், நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண் டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததா என்பது குறித்த உறுதியான தகவல் அறிவிக்கப்
படவில்லை.இந்த
சட்டப்படி, மார்ச், 31க்கு பின், 10க்கு மேற் பட்ட, செல்லாத, பழைய ரூபாய்
நோட்டுகளை வைத் திருப்பது குற்றம். இருப்பினும், செல்லாத நோட்டு களை, ரிசர்வ்
வங்கியின் கிளைகளில், 'டிபாசிட்' செய்யஅனுமதிக்கும் ஷரத்து, அவசரச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
எதிர்காலத்தில் சட்ட வழக்குகள் தொடரப்படுவதை தடுக்கும் நோக்கத்தில், செல்லாத தாக அறிவிக்கப் பட்ட நோட்டுகள் மீது, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு பொறுப்புகளை நீக்கும் ஷரத்தும், அவசர சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
செல்லாத நோட்டுகளை, வங்கிக் கணக்கில், 'டிபா சிட்' செய்வதற்கான அவகாசம், 30ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, வங்கிகளில், 'டிபாசிட்' ஆன, செல்லாத நோட்டுகளை மதிப்பிடவும், அதன் அடிப்படையில், 2017 - 18ம் நிதியாண்டுக்கான, பட் ஜெட் செலவினங்களை முடிவு செய்யவும், அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்த, அவசர சட்டம், அடுத்த ஆறு மாதங்களில், பார்லி மென்டில் முறையாக நிறைவேற்றப்பட்டு, சட்டம் ஆக்கப்பட வேண்டும்.
முதலில் செலுத்தணும் வரிஅப்புறம் தான் மன்னிப்பு
மத்திய அரசின், 'பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா' எனப்படும், புதிய வரிஏய்ப்பு மன்னிப்பு திட்டத்தை பயன்படுத்த விரும்பும், கறுப்புப்பண
முதலைகளுக்கு, சில நிபந்தனைகள் உண்டு. பதுக் கிய பணத்தில், 49.9 சதவீதத்தை,
வரியாக, முதலில் செலுத்த வேண்டும்; 25 சதவீத பணத்தை, வட்டி இல்லாத
முதலீடாக, நான்கு ஆண்டுகளுக்கு, 'டிபாசிட்'செய்ய வேண்டும். அதன் பின்னரே, வரி ஏய்ப்பு மன்னிப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதுகுறித்து, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கணக்கில் காட்டாமல், 500 - 1,000 ரூபா யாக,
இருப்பில் வைத்துள்ளோர், கடைசி வாய்ப் பாக, வரி ஏய்ப்பு மன்னிப்புதிட்டத்தை பயன் படுத்த லாம். ஊழல், பினாமி சொத்து, சட்ட விரோத பணப் பரிமாற்றம், அன்னிய செலாவணி முறை கேடு, போதை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக் காக வழக்கு நிலுவையில் உள்ளோ ருக்கு, இந்த திட்டம் பொருந்தாது.
திட்டத்தை பயன்படுத்துவோர், தவறான தகவல் களை அளித்தால், அவரது உறுதிமொழி செல்லாததாக கருதப்படும். இத்திட்டம், டிச., 17ல் துவங்கி, 2017, மார்ச், 31 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடரில், செல்லாத நோட்டு தொடர்பாக சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற, மத்திய அரசு பயப்பட் டது; இதனால், பின்புற வழியாக, அவசர சட் டத்தை கொண்டு வந்துள்ளது.
சீதாராம் யெச்சூரி, பொதுச்செயலர், மார்க்.கம்யூ.,- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (19)
Reply
Reply
Reply