திண்டுக்கல்: மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு 'சின்னத்தாய்' பட்டம் சூட்டி திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், பழநி கோதைமங்கலம் உட்பட பல இடங்களில் ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அ.தி.மு.க.,வினர் சின்னம்மாவுக்கு ஆதரவு என சசிகலாவுக்கு வைக்கப்படும் போஸ்டர், பேனர்கள் கிழிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த கனிபாலு தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களை திண்டுக்கல், கொடைக்கானல், வத்தலக்குண்டு உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தார்.
அதில் 'நிதியை நீதி வென்றது- நேற்று, நீதியை நிதி வென்றது - இன்று' சின்னத்தாய் தீபாவே தமிழகத்தை தலைமை ஏற்க தகுதியானவர் என வாசகம் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து கனிபால் கூறியதாவது: தீபாவிற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் என்னிடம் அலைபேசியில் பேசி வருகிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினமான பிப்., 24ல் முதல் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலியில் நடத்த உள்ளோம். தற்போது வரை தீபாவிற்கு 2 ஆயிரத்து 636 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்களின் விபரங்கள் என்னிடம் உள்ளன. எங்கள் 'சின்னத்தாய்' கட்சிதுவங்கினால் இணைய காத்திருக்கின்றனர், என்றார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளராக இருந்தவர்.
திருப்பூரிலும் போஸ்டர்கள் :
'ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும்' என, திருப்பூரில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. பெயர் குறிப்பிடப்படாத அந்த போஸ்டரில், 'அம்மா அவர்களின் அடுத்த வாரிசு, தீபா தலைமையில் அணி வகுப்போம். அனைவரும் வாரீர் வாரீர்;- இவண் ராயபுரம் பகுதி, அ.தி.மு.க., அடிமட்ட தொண்டர்கள்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே போல், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், திருப்பூரின் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10)
Reply
Reply
Reply