பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., அண்ணன் மகள் தீபா
புத்தாண்டில் புது முடிவு

சென்னை:''அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை, ஜன., 2ல் அறிவிப்பேன்,'' என, அ.தி.மு.க., தொண்டர்களிடம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உறுதி அளித்தார்.

ஜெ., அண்ணன் மகள் தீபா  புத்தாண்டில் புது முடிவு

ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர் சசிகலா; அவரது குடும்பத்தி னரை, ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் சேர்க்க வில்லை. சசிகலாவிற்கு எந்த பதவியும்

வழங்கவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந் ததும், அவரால் விலக்கப்பட்ட சசிகலா குடும்பத்தி னர் அனைவரும் ஒன்றாகினர்.

கட்சியை தங்கள்கட்டுப்பாட்டில் கொண்டு வர, தொடர் நடவடிக் கைகள் எடுத்தனர். இதனால், சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ளார். இது, ஜெயலலிதா விசுவாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிருப்தியாளர் கள், கட்சிக்கு தலைமை யேற்க வரும்படி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று, ஏராளமான தொண்டர் கள், தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டில் குவிந்தனர். 'அரசியலுக்கு வர வேண்டும்; அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும்' என, கோஷமிட்டனர்.

Advertisement



அவர்களிடம் பேசிய தீபா, ''அனைவரும் அமைதியாக இருங்கள். ஜன., 2ல், என் முடிவை அறிவிக்கிறேன்; அது நல்ல முடிவாக இருக்கும்,'' என்றார். அதை ஏற்று, தொண்டர்கள் கலைந்து சென்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rama Subbu - thiruvarur,இந்தியா
31-டிச-201621:15:01 IST Report Abuse

Rama Subbuஆரம்பத்தில் தீபா அவர்களை பற்றி தெரியாமல் ஆதரவு தெரிவித்து அம்மாவின் வாரிசு என்று தூக்கியவர்கள் எல்லோரும் இவர் கிருத்துவர் என்று தெரிந்து கொண்டு எப்படி எல்லாம் தடம் புரண்டு பேசுகிறார்கள் ....வேதனை வேதனை ......நல்லவரா கெட்டவரா என்பதை விட மதம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்கு ....இறைவா நீதான் எங்களிடம் ஒற்றுமை ஏற்பட வழி காட்டணும் .

Rate this:
Rama Subbu - thiruvarur,இந்தியா
31-டிச-201621:07:15 IST Report Abuse

Rama Subbuசகோதரி தீபா ,,அரசியல் சாக்கடையில் வந்து தன்னால் விழ வேண்டாம் ...உசுப்பேத்தி விட்டு உங்களை ஒரு வழி பண்ணி விடுவார்கள் ...அண்ணா திமுகவில் வேண்டுமானால் சேர்ந்து உங்களின் திறமை நடத்தையால் முன்னுக்கு வாங்க அரசியலில் ஆச இருந்தால் ....அதை விடுத்தது வேறு எது செய்தாலும் இப்ப உள்ள சூழ்நிலையில் உங்களுக்கு எந்த லாபமும் தராது ...அம்மாவின் சொந்தம் என்பதால் அக்கறையில் சொல்றேன் ....அம்மாவின் சொத்து பத்துக்களில் உங்களுக்கும் உரிமை இருக்கு ...அதை சட்டப்படி வாங்கி கொண்டு குடும்பத்துடன் சந்தோசமா பொழுதை களியுங்கள் ...அரசியல் சாக்கடை உங்களுக்கு வேணாம் ....நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கவே கிடைக்காது ...தவறானவர்கள் உங்கள் பின்னணியில் இருந்து உசுப்பேத்தி கொண்டு இருக்கிறார்கள் ....நல்ல முடிவை தேர்ந்து எடுங்கள் .

Rate this:
ravi - chennai,இந்தியா
31-டிச-201618:37:57 IST Report Abuse

raviதீபா உங்களுக்கு காத்திருப்பது ஈஸியான வேலை இல்லை - இந்த ராட்சச கொலை கொள்ளைக்கார கூட்டத்தை அடக்குவது எளிதல்ல - ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் மக்கள் உங்களுடன் இருப்பார்கள் - அவரை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியில் போட்டாலே பாதி வேலை முடிந்தா மாதிரி - வாழ்த்துக்கள்

Rate this:
மேலும் 87 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X